tamil.thehindu.com :ஒய்.ஆண்டனி செல்வராஜ்/ எஸ்.சன்னாசி
ஜல்லிக்கட்டுப் போட்டியை முன்னிட்டு, காளைகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் நேற்று முன்தினம் இரவே பாலமேட்டில் திரண்டனர். மொத்தம் 988 காளைகள், வாடிவாசலில் அவிழ்த்துவிட முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. மதுரை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து காளை உரிமையாளர்கள் வாகனங்களில் ஏற்றி வந்த தங்கள் காளைகளை, பாலமேடு வாடிவாசல் பின்பகுதியில் ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் ஒதுக்கியிருந்த இடத்தில் நேற்று முன்தினம் இரவு முதலே நிறுத்தத் தொடங்கினர்.
டோக்கன் வரிசை அடிப்படையில் காளை கள், வாடிவாசலில் அவிழ்த்து விடப்படும். ஆனால், காளைகளை டோக்கன் வரிசைப் படுத்த முன் ஏற்பாடு செய்யவில்லை எனக் கூறப் படுகிறது. அதனால், வாடிவாசலுக்கு காளை களை முந்தி அழைத்து செல்வதில் காளை உரிமையாளர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டது.
இதில் அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
காளை உரிமையாளர்கள் வாக்குவாதம் செய்ததால் காளைகள் மிரண்டு ஓட்டம் பிடிக் கத் தொடங்கின. இதில், காளைகள் முட்டி உரிமையாளர்கள் பலர் காயம் அடைந்தனர். நிலைமை கை மீறிப் போகவே போலீஸார், லேசான தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதனால், அப் பகுதியே போர்க்களம்போல ஆனது. அதன் பிறகும் டோக்கன் அடிப்படையில் வரிசைப் படுத்த முடியவில்லை. அதனால் முன்வரிசை யில் டோக்கன் பெற்றும் வாடிவாசலில் காளை களை அவிழ்த்துவிட முடியாமல் வெளி மாவட்ட காளை உரிமையாளர்கள் ஏமாற்றத் துடன் திரும்பினர். உள்ளூர் மற்றும் பக்கத்து ஊர்க்காரர்கள் போலீஸ் மற்றும் சிலரது சிபாரிசின்பேரில் காளைகளை தடுப்பு வேலி களை உடைத்து இடையில் சேர்த்ததால் குழப் பம் ஏற்பட்டது.
இதுகுறித்து மதுரை ஐராவதநல்லூரைச் சேர்ந்த கண்ணன் கூறும்போது, ‘‘எனக்கு 36- வது டோக்கன் கிடைத்தது. ஆனால், 300 காளைகளுக்கு பிறகே வாடிவாசல் செல்ல முடிந்தது. டோக்கன் வழங்குவதே வரிசையில் செல்லத்தான். ஆனால் அதை முறையாக பின்பற்றவில்லை’’ என்றார்.
சிவகங்கை முனீஸ்வரன் கூறும்போது, ‘‘வெளியூரில் இருந்து ஒரு காளையை அழைத்து வர குறைந்தது ரூ.5 ஆயிரம் செல வாகிறது. காளையுடன் 5 பேர் வர வேண்டி உள்ளது. பரிசு பெறுகிறதோ இல்லையோ, வாடிவாசலில் அவிழ்த்துவிட்டால்தான் எங்க ளுக்கு பெருமை. இல்லாவிட்டால் ஊரில் மானப் பிரச்சினையாகிவிடும். சரியாக ஏற் பாடு செய்யாததால் இந்த முறை எங்களுக்கு கிடைத்தது அவமானம்தான்’’ என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக