tamil.indianexpress.com : விருதுநகரில் இரத்தம் பரிமாற்றத்தால் எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு
பிறந்த குழந்தைக்கு அரசு சார்பில் 9 மருத்துவர்கள் கொண்ட குழு சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு எச்ஐவி ரத்தம் ஏற்பட்டது. இதனால் அந்தப் பெண்ணை உயிர்க்கொல்லி நோய் பாதித்தது. இந்தியா முழுவதும் இந்த செய்த பரபரப்பை ஏற்படுத்தியது. பல மாதங்களுக்கு முன்பு ஒரு இளைஞர் இரத்த தான் செய்துள்ளார், ஆனால் தானம் செய்தவருக்கே இந்த பாதிப்பு தெரியாமல் இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதன் விளைவாக, மன உளைச்சலில் அந்த இளைஞர் தற்கொலை செய்துக்கொண்டார்.
இந்த விவகாரத்தில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அப்பெண்ணுக்கு அரசு சார்பில் அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில், பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்புக்கு பிறகு தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக மதுரை ராஜாஜி மருத்துவமனை முதல்வர் சண்முகசுந்தரம் தெரிவித்தனர்.
தாய்க்கும் குழந்தைக்கும் 9 பேர் கொண்ட மருத்துவ குழு தீவிர கண்காணிப்பில் வைத்து மருத்துவம் கொடுத்து வருகின்றனர். குழந்தையின் எடை சுமார் ஒரு கிலோ 700 கிராம் இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். குழந்தையின் எடை மிகவும் குறைவாக இருப்பதால் அந்த குழந்தை தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் இருக்க மருத்துவமனையிலேயே அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் தரப்பட்டு வருகிறது, இருப்பினும் 45 நாட்களுக்கு பின்னரே குழந்தையின் ரத்தத்தை பரிசோதனை செய்து எச்.ஐ.வி பரவியுள்ளதா? என்பதை உறுதி செய்ய முடியும் என்றும் மதுரை ராஜாஜி மருத்துவமனை மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் குழந்தைக்கு தற்போதைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், குழந்தை ஆரோக்கியமாக இருக்க தேவையான உணவுகள் கொடுக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக