புதன், 16 ஜனவரி, 2019

கிச்சிலி சம்பா பொங்கல்.. நெல் ஜெயராமன் வயலில் பாரம்பரிய கிச்சிலி சம்பா

n
n
nnakkheeran.in - பகத்சிங் : அழிவின் விளிம்பில் இருந்த நம் பாரம்பரிய நெல் ரகங்களில் 174 ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராம் சில மாதங்களுக்கு முன்பு கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது இறப்பு பாரம்பரிய நோயில்லா உணவை தேடும் மக்களின் பேரிழப்பாக அமைந்துவிட்டது.   ஆனாலும் அவரால் தனது சொந்த கிராமமான ஆதிரெங்கம் கிராமத்து வயலில் பாரம்பரிய நெல்லரிசி பொங்கல் விழாவை 2008 ம் ஆண்டு தொடங்கினார்.
இந்த ஆண்டு அவர் இல்லை என்பதால் அந்த விழாவை மறந்துவிடாமல் அவரது குடும்பத்தாரும் அவரின் தேடலுக்கு துணை நின்றவர்களும் இயற்கை ஆர்வலர்களும் நெல் ஜெயராமன் வயலில் நெல் கதிர் தோரணங்களுடன் அலங்கரிக்கப்பட்ட இடத்தில் சிச்சிலி சம்பா சன்னரக புத்தரிசில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.  இவ்விழாவில் கீரீன் நீடா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு கலந்து கொண்டார்.



ஒவ்வொரு ஆண்டும் இதே இடத்தில் பாரம்பரிய நெல்லரிசி பொங்கல் விழா நடக்கும் என்றனர் ஏற்பாட்டாளர்கள்.   அதே போல நீடாமங்கலம் சுற்றியுள்ள கிராமங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீட்டுக்கு வீடு மரக்கன்றுகள் வழங்கியதுடன் பொது இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பசுமை பொங்களை கொட்டாடினார்கள் கிரீன் நீடா மற்றும் கலாம் மாணவர்  அமைப்பினரும்.


இந்த பசுமை பொங்கல் விழாவில் அதிகாரிகளும் பள்ளி நிர்வாகிகளும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.  கஜாவால் இழந்த மரங்களைவிட 10 மடங்கு மரங்களை வளர்ப்போம்.. புயலை தாங்கி வளரும் பனைக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என்றனர் கிரீன் நீடா அமைப்பினர்.

கருத்துகள் இல்லை: