வெள்ளி, 12 அக்டோபர், 2018

சின்மயி by Savukku · 23/10/2012 .. அன்று ஜெயலலிதாவின் உதவியோடு பொய்வழக்கு போட்ட கதை

savukkuonline.com : இன்று சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசாரால், தேசிய
ஆடை வடிவமைப்புக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் சரவணக்குமார் என்பவர், கைது செய்யப்பட்டுள்ளார்.  ராஜன்லீக்ஸ் என்ற பெயரில் இணையத்தில் எழுதிவரும் ராஜன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவர்கள் இருவரைத் தவிர செந்தில்குமார்,  மந்திரமூர்த்தி, சரவணக்குமார், ராமநாதன் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.    பெண்கள் மீதான வன்கொடுமைச் சட்டப் பிரிவு 4, தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 66 A மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு  செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் மீது புகார் அளித்தவர், பிரபல பின்னணிப் பாடகி சின்மயி. சின்மயி புகார் அளித்ததற்கு காரணம், சின்மயியின் தாயாரைப் பற்றி அவதூறாக சில ட்விட்டுகள் இட்டிருந்தார்கள் என்பதே. இதைத் தவிரவும், புகாருக்கு ஆளானவர்கள், தமிழக மீனவர்கள் மற்றும் இட ஒதுக்கீட்டுக் கொள்கைகள் தொடர்பாக ட்விட்டரில் நடந்த விவாதங்களின்போது சின்மயியோடு இணையத்திலேயே மோதல் ஏற்பட்டு சின்மயிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள் என்பதும் புகாரில் உள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையிலேயே இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ஃபேஸ் புக், ட்விட்டர் போன்ற சமூக வளைத்தளங்கள் என்பன கருத்துச் சுதந்திரத்துக்காகவே உருவானவை.   சமூகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக உருவானவை.  இந்தத் தளங்கள் உருவானதால், கருத்துக்களை வெளிப்படுத்த ஒரு தளம் இல்லாமல் இருந்த நிலை மாறி, வானம் முதல், அதள பாதாளம் வரை, எந்த விஷயத்தையும் விட்டு வைக்காமல் கருத்துச் சொல்லும் இடமாக இந்த சமூக வலைத்தளங்கள் மாறியுள்ளன. 
எல்லா நல்ல விஷயங்களோடு சேர்த்து, சில தீயதும் இருப்பதுபோல,  இந்த சமூக வலைத்தளங்கள் கருத்துக்களை விவாதிக்கும் இடமாக மட்டுமல்லாமல், அவதூறுப் பேச்சுக்களுக்கான இடமாகவும் மாறிப்போனது.  இந்த வலைத்தளங்களில் நடக்காத சண்டையே கிடையாது.  சாதாரண உப்புப் புளி விவகாரம் முதல், உலக அரசியல் வரை சண்டையிட்டுக் கொள்வார்கள்.  இதில் கிண்டல் செய்யப்படாத அரசியல்வாதிகளே இல்லை.  சில அரசியல்வாதிகளைக் கிண்டல் செய்வதையெல்லாம் பார்த்தால் பகீரென்று இருக்கும்.  அப்படி மோசமாகக் கிண்டல் செய்வார்கள்.  ட்விட்டர் என்பது இரண்டே இரண்டு வரிகளில் எழுதும் கட்டாயம் இருப்பதால், அதில் அவரவர்கள் தங்கள் படைப்புத் திறனைப் பயன்படுத்தி இரண்டே வரிகளில் எழுதுவார்கள்.  இந்த இரண்டே இரண்டு வரிகளில் அவதூறு செய்பவர்களும் ஏராளமாக உண்டு.
சின்மயிக்கும், ராஜன்லீக்ஸ் உள்ளிட்டோருக்கும் பல மாதங்களாகவே விவாதங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.  ஒரு கட்டத்தில், ராஜன்லீக்ஸை சின்மயி ப்ளாக் செய்கிறார்.   ஆனால் அதன் பிறகும், பல்வேறு பெயர்களில் தன்னைப் பற்றி அவதூறாக ட்வீட்டுகள் இடப்பட்டது என்கிறார் சின்மயி.
கடந்த அக்டோபர் 4 அன்று, சின்மயியின் தாயார் செந்தில்நாதன் என்பவருக்கு போன் செய்ததும், அது தொடர்பாக அவரும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள சரவணகுமாரும், சின்மயியின் தாயார் குறித்து எழுதிய ட்வீட்டுகளே தற்போது புகாருக்குக் காரணமாக இருந்துள்ளது.   இந்த ட்வீட்டுகளே ஆதாரமாக காவல்துறையிடம் வழங்கப்பட்டுள்ளது.
சின்மயி அளித்துள்ள விளக்கத்தில், தமிழக மீனவர்கள் குறித்து தொடங்கப்பட்ட ஹேஷ் டேகில் (ஹேஷ் டேக் என்றால் தொடர் ட்விட்டுகள்) சின்மயியை இணையச் சொல்லி வற்புறுத்தியதாகவும், அதற்கு அவர் மறுத்ததால் அவரோடு தொடர்ந்து விவாதத்தில் ஈடுபட்டு அவரை வற்புறுத்தியதாகவும், அப்போது நான் சைவம் மீன் சாப்பிடுவதில்லை என்று அவர் எழுதிய ட்வீட் ஒன்று திரிக்கப்பட்டு தன்னைப்பற்றி அவதூறாக செய்தி பரப்பியதாகவும் கூறுகிறார் சின்மயி.   சின்மயி நீங்கள் மீன்களைக் கொல்கிறீர்கள், அவர்கள் மீனவர்களைக் கொல்கிறார்கள் என்று சொன்னதாக எவ்வித ஆதாரமும் இணையத்தில் இது வரை சமர்ப்பிக்கப் படாத நிலையில் சின்மயியின் விளக்கத்தை உண்மை என்றே ஏற்க வேண்டியதுள்ளது.
ஆடை வடிவமைப்புக் கல்லூரியின் பேராசிரியரும், செந்தில் என்பவரும், சின்மயியின் தாயைப் பற்றி விவாதித்த விஷயங்கள் நாகரீகமானவையாக இல்லை என்பது உண்மைதான்.  அவர்கள் எவ்வித உள்நோக்கமும் இல்லாமல், ஒரு நகைச்சுவைக்காகப் பேசியிருப்பார்கள் என்று ஒரு வாதத்துக்காக எடுத்துக் கொண்டாலும், அதில் சம்பந்தப்பட்டவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கையில் அதை நியாயப்படுத்த முடியாது.  இப்படி எழுதிய இருவரும், தங்கள் தாயையோ, மனைவியையோ, தங்கையையோ பற்றி இப்படி உரையாடுவார்களா என்பதை அவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டும். தனிப்பட்ட முறையில் இருவர் நேராகச் சந்தித்து உரையாடும்போது இப்படி லூஸ் டாக் செய்வது வேறு.  ஆயிரக்கணக்கானோர் பார்வையிடும் சமூக வலைத்தளங்களில் ஒரு பெண்ணின் தாயைப் பற்றிய இப்படிப் பட்ட கொச்சையான உரையாடல்களை மன்னிக்க முடியாது.
இட ஒதுக்கீடு குறித்த சின்மயியின் ட்வீட்டுகளைப் பார்க்கும்போது, இந்தியாவில் நிலவும் சாதியக் கட்டமைவு குறித்து அவர் எவ்விதப் புரிதலும் இல்லாமல் இருக்கிறார் என்பது தெரிகிறது. அதே நேரத்தில் ட்விட்டரில் அவரோடு உரையாடுபவர்கள், சின்மயி விலகி விலகிப் போனாலும், அவரை மீண்டும், மீண்டும் இட ஒதுக்கீடு குறித்து உரையாட வற்புறுத்தி அழைத்துள்ளனர் என்பது தெரிகிறது.   அப்படி தொடர்ந்து நடந்த உரையாடலில் ஒரு கட்டத்தில் சின்மயி, இட ஒதுக்கீடு என்பது வசதி படைத்தவர்களுக்கு வழங்கக் கூடாது, உண்மையான தேவை இருப்பவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்.   அடுத்தடுத்த உரையாடல்களில், 99.9 சதவிகித மதிப்பெண் பெற்ற ஒருவருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் போவது என்ன நியாயம் என்று எழுதுகிறார்.   உலகம் எல்லோருக்கும் சம வாய்ப்புகளை வழங்குகிறது பின் ஏன் புலம்புகிறீர்கள் என்று எழுதுகிறார்.  இதுவே சின்மயி மீதான குற்றச்சாட்டு.  சின்மயி இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர் என்ற புகார் எழுகிறது.
முதலில் அடிப்படையான விஷயம் சின்மயி பிரபலமானவர் என்பதால் அவரோடு உரையாடி அவர் நட்பைப் பெறுவதில், பலர் போட்டி போட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.   ஏழரை, தியாகு1973, போன்றோர் சின்மயிக்கு சாதி குறித்து வகுப்பு எடுப்பதற்கு கடுமையாக முயற்சிக்கிறார்கள்.  ஒரு கட்டத்தில் சின்மயி ஏழரை என்பவரிடம், நான் உங்களிடம் விவாதிக்க விரும்பவில்லை என்கிறார்.  இருந்தாலும் விடாமல் வம்படிக்கிறார்கள்.  பிரபலமானவரோடு பழகி, அவரை விவாதத்தில் வெல்ல வேண்டும் என்று இவர்கள் எடுக்கும் முயற்சியின் வெளிப்பாடே இது போன்ற வெட்டி சர்ச்சைகள்.  இந்த ஏழரை, தியாகு போன்றோர், இணையத்தில் அமர்ந்து ட்விட்டரில் இப்படி வெட்டி வம்பளப்பதைத் தவிர்த்து, தலித்துகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும், ஒரு துரும்பை எடுத்துப் போட்டிருப்பார்களா என்றால் நிச்சயம் இருக்காது.  ஒரு கம்ப்யூட்டரும், இணைய இணைப்பும், இருந்து விட்டால், இந்த ஏழரை, தியாகு போன்றோர் தங்களை சே குவாரா என்று நினைத்துக் கொண்டு, சமூக வலைத்தளத்தில் புரட்சி செய்யக் கிளம்பி விடுகிறார்கள். இறைவனின் கண்களுக்கு முன் அனைவரும் சமம் என்று பேசும் பெண் சாதிக் கொடுமை என்றால் என்ன என்பது தெரியாமல் அறியாமையில் பேசுகிறார் என்பது தெரிய   வேண்டாமா ?  அவரிடம் தொடர்ந்து வெட்டி விவாதத்தில் ஈடுபடுவதே, அவரின் நட்பை பெற வேண்டும் என்பதற்காக என்பது வெளிப்படையாகத் தெரிகிறதா இல்லையா ?   சின்மயி என்ன உலகில் இல்லாத மிகப் பெரிய அரசியல் தலைவரா…. அவர் சாதிக் கொடுமைகளைப் பற்றிப் புரிந்து கொண்டால், தமிழகத்தின் அத்தனைக் கோயில் கருவறைகளிலும் தலித்துகளை அனுமதிக்கப் போகிறார்களா… ?
எல்லா இடங்களிலும் நடக்கும் அதே விஷயம் இணையத்திலும் தொடர்ந்து நடப்பதைக் காண முடியும்.  பெண் என்றால் அவளிடம் சென்று தேவையில்லாமல் வழிவது, எப்படியாவது அவள் நட்பைப் பெறுவது என்று முயல்வது… அவள் நட்பு கிடைக்கவில்லை என்றாலோ, வழக்கமாக ஆண் மனதுக்குள் வைத்திருக்கும் வரையறையை மீறி அவள் நடந்து கொண்டாலோ அவளை விழுந்து பிராண்டுவது என்ற போக்கு, சமூக வலைத்தளங்களில் அதிகமாகவே காணப்படுகிறது.   ட்விட்டரிலும், ஃபேஸ் புக்கிலும் இருக்கும் பெண்கள் இதை நன்றாகவே உணர்ந்திருப்பார்கள்.   பெரும்பாலான பெண்கள், முக்கியமான அரசியல் விவாதங்களில் பங்கெடுக்காமல் இருப்பதன் காரணமே, மாறுபட்ட கருத்தை அவர்கள் தெரிவித்ததும், அவர்கள் மீது எழும் பாலியல் ரீதியான தாக்குதல்.  உதாரணமாக முகநூலில் ஒரு பொருள் குறித்து விவாதம் நடக்கிறது என்றால், அதில் வரிசையாக கருத்துக்கள் விழும்.  ஒரு பெண் கருத்து போட்டவுடன், அதற்கு நூற்றுக்கணக்கில் போட்டி போட்டுக் கொண்டு லைக் போடுவார்கள்.  அதே பெண், மாறுபட்ட கருத்தை தெரிவித்தால், “உன்னைப் பத்தித் தெரியாதா” என்ற தரத்தில் வரும் கருத்துக்கள், அந்தப் பெண், முகநூலை விட்டே ஓடும்படி செய்து விடும்.   இந்த வன்முறையான போக்கு பல பெண்களை, பெண்களோடு மட்டும் நட்பாக இருக்கும்படி அச்சத்தோடு ஒதுங்கி இருக்க வைத்திருக்கிறது என்பதே உண்மை.  ஆண்களுக்கு இணையாக, அரசியலை தீவிரமாக விவாதிக்க அவர்களுக்கு ஆர்வம் இல்லையா என்ன ?   ஆனால், சமூக வலைத்தளங்களில் கூட, அவர்கள் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கப்படுவதில்லை என்பதே யதார்த்தம்.
ஆண்களாக இருக்கும் நம் ஒவ்வொருவர் உடலிலும் உள்ள ஜீன்கள், பெண்களை நம்மை விடக் கீழானவர்களாகவே பார்க்க வைக்கிறது என்பது அறிவியல் உண்மை.  நாகரீக வளர்ச்சியின் காரணமாக, இதை வெல்வதற்கு நாம் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டாலும், இயற்கையிலேயே நம்முள் அமைந்துள்ள நமது மனப்பாங்கு, பெண்களை பாலியல் ரீதியில் விமர்சிக்கவும், அவர்களை நிலைகுலைந்து போகவைக்கும் அளவுக்கு below the belt தாக்குதலைச் செய்யத் தூண்டுகிறது என்பதே உண்மை.  நம்மோடு இயைந்து பேசும் பெண்களை ஆராதிப்பதும், திமிறும் பெண்களை தரக்குறைவாகப் பேசுவும் வைக்கும் குணம், நம் ஒவ்வொருவர் மனதிலும் அகற்ற முடியாத அளவுக்கு பச்சையாக படிந்திருக்கிறது என்பது நாம் ஒப்புக்கொண்டேயாக வேண்டிய கசப்பான உண்மை.
சின்மயி ஒரு சிறந்த பாடகர்.   அருமையான பாடல்களைப் பாடியுள்ளார்.  அது தவிரவும் அவர் நல்ல பிசினெஸ் பர்ஸன் என்றும் சொல்கிறார்கள்.    இப்படி பன்முகத் திறமைகளைக் கொண்டிருப்பதால், சின்மயி தனக்கு உலகத்தில் எல்லாமும் தெரிந்து விட்டது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது.   கர்நாடக பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருக்கும், மாளகத்தி என்பவர் எழுதிய சுயசரிதை கவர்மென்ட் பிராமணன் என்ற பெயரில் பாவண்ணனால் மொழிபெயர்க்கப்பட்டு வந்துள்ளது.    அதில் ஒரு தலித்தின் வாழ்க்கை என்ன, அவன் அனுபவித்த வேதனை என்ன என்பதை வர்ணித்திருப்பார்.    அது போன்ற கொடுமைகள் என்றால் என்ன என்பதை, ராமாயணத்தையும், மஹாபாரதத்தையும் புரட்டிப் புரட்டிப் படித்துவிட்டு, மகாபாரதத்தில் யுதிஷ்ட்டிரர் ஒருவன் பிறப்பால் பிராமணன் ஆவதில்லை, நடத்தையால் பிராமணன் ஆகிறான் என்று விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கும் சின்மயியால் உணர முடியாது.
சவுக்கடியும், சாணிப்பாலும் தலித்துகளின் வாழ்வின் ஒரு பகுதியாக ஒரு காலத்தில் இருந்தது, தற்போது இல்லை என்பது உண்மை என்றாலும் கூட, சின்மயி வணங்கும் ஸ்ரீரங்கம் அரங்கநாதன் ஆலயக் கருவறைக்குள் ஒரு பறையனை அழைத்துச் செல்ல முடியுமா சின்மயியால் ?  சிலாகிப்போடு இளையராஜா சார் என்று அழைக்கிறாரே சின்மயி… அந்த இளையராஜா சார் அரங்கநாதன் ஆலயத்துக்கு தங்கக் கூரை வேய்வதற்கு லட்சக்கணக்கான பணத்தை நன்கொடையாக அளித்த பிறகும் கூட, அவர் கருவறைக்குள் அனுமதிக்கப்படவில்லை தெரியுமா ?    அரங்கநாதன் ஆலயக் கருவறைக்குள் பறையர்கள் சகஜமாக அனுமதிக்கப்படும் வரையில், தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு தொடரத்தான் வேண்டும் என்பதுதான் யதார்த்தம்.
5637580130_62208c397a_b
இல்லை..  இட ஒதுக்கீடே கூடாது. அனைவரும் சமம். இட ஒதுக்கீடு ஒழிக்கப்பட வேண்டும் என்ற கூறுவதற்கு சின்மயிக்கு உரிமை உண்டு.   அப்படி கருத்து கூற துணிச்சல் இருக்கும் சின்மயி அது தொடர்பாக வரும் எதிர்வினைகளை சந்திக்கத் தயாராகவே இருக்க வேண்டும்.  அதுவும், இட ஒதுக்கீடு போன்ற உணர்ச்சிபூர்வமான விவகாரங்களில் வரும் எதிர்வினைகள் மிகக் கடுமையாக இருக்கும்.   பிரபலமாக இருப்பவர்களுக்கு ப்ரைவசி என்பது கிடையாதா… அவர்கள் மட்டும் ஏன் இப்படி குறி வைத்துத் தாக்கப்படுகிறார்கள் என்று அங்கலாய்க்கும் சின்மயி, தான் பிரபலமாக இருந்து, தன் சங்கீதத்தைப் பற்றியும், பாடல்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்த வரை எவ்விதமான பிரச்சினையும் உருவாக வில்லை என்பதையும், மீனவர்கள், தலித்துகள் போன்ற பிரச்சினைகள் குறித்து கருத்து சொன்ன பிறகே இது போன்ற தாக்குதல்கள் வருகின்றன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.    இந்தியா மட்டுமல்ல… உலகெங்கிலும் பிரபலங்கள் முக்கிய விவகாரங்களில் சொல்லும் கருத்துக்களைத் தெரிந்து கொள்ள பெரும்பாலான மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். ட்விட்டரிலும், ஃபேஸ் புக்கிலும், சின்மயியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகம் என்பதே இதற்கு சான்று. பிரபலமாக இருப்பவர்கள் எப்போது தவறு செய்வார்கள், அவர்களை கடுமையாக விமர்சனம் செய்யலாம் என்று காத்துக் கொண்டுதான் இருப்பார்கள்.   பிரபலமானவர்கள் இதனால் கூடுதல் பொறுப்போடு செயல்பட வேண்டும்.  சின்மயியியும் பிரபலமாக இருப்பதால், அவர் சொல்லும் கருத்துக்கள் உற்று நோக்கப்படுகிறது என்பதையும் சின்மயி உணர வேண்டும்.
முக்கிய விவகாரங்களில் நான் கருத்து சொல்வேன்… என்னை யாரும் விமர்சிக்கவோ, எதிர்வினையாற்றவோ கூடாது என்று எதிர்ப்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்.   எதிர்வினைகள் பண்பாகவும் இருக்கும், Below the Belt ரகத்திலும் இருக்கும்.   அவற்றை எதிர்க்கத் துணிவில்லையென்றால் சின்மயி, அவருடைய ப்ளாக்கில் எழுதுகிறாரே… I Miss Thayir Saadham என்று… அது போன்ற முக்கிய விவகாரங்களில் தன் கருத்தை பதிவு செய்தால், அவருக்கு யாரும் எதிர்வினையாற்றப் போவதும் இல்லை… விமர்சனம் செய்யப்போவதும் இல்லை.
சின்மயிக்கு எல்லா விஷயங்களிலும் கருத்து சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் இருப்பது புரிகிறது.   அப்படியானால், அவர் விமர்சனங்களை எதிர்க்கொள்ளும் பக்குவத்தையும், நகைச்சுவை உணர்வையும் சின்மயி வளர்த்துக் கொள்ள வேண்டும்.  ட்விட்டரிலும், ஃபேஸ் புக்கிலும் அரசியல்வாதிகள் எப்படி விமர்சனம் செய்யப்படுகிறார்கள் பாருங்கள்… ட்விட்டரை எடுத்துக் கொண்டால் சோனியா காந்தியைப் பற்றி எழுதியுள்ளவையெல்லாம் ஏற்றுக் கொள்ளவே முடியாதவை.  பத்திரிக்கையாளர்கள், பர்கா தத், சகாரிக்கா கோஷ் போன்றவர்களைப் பற்றிய விமர்சனங்களை ட்விட்டரில் படித்திருக்கிறீர்களா இல்லையா…
பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசாயை எவ்வளவு மோசமாக ட்விட்டரில் வறுத்து எடுத்திருக்கின்றனர் தெரியுமா ?  மிகப் பிரபலமான அரசியல் தலைவரான சுப்ரமண்ய சுவாமி, ட்விட்டரில், சோனியாவை விஷக்கன்னி என்றே அழைக்கிறார் என்பது தெரியுமா… ?
நீங்கள் காவல்துறையில் புகார் கொடுத்தது மட்டுமல்ல.  அதில் நடவடிக்கை எடுக்கப்படாது என்று தெரிந்து  உங்களுக்குத் தெரிந்த செல்வாக்கான அதிகாரியை அணுகி, “மீசைக்கார போலீஸ் அங்க்கிள்… அவனை அரெஸ்ட் பண்ணுங்க அங்கிள்” என்று உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தியதும், தண்ணீரை விட அடர்த்தியான திரவத்தின் காரணமாக அவர் தன் செல்வாக்கைப் பயன்டுத்தியதன் காரணமாகவுமே இந்தக் கைது நடந்திருக்கிறது.  புகார் கொடுக்க உங்களுக்கு உரிமை உண்டு.  ஆனால், அதற்குப் பிறகு சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய வைக்க நீங்கள் செய்த லாபி நேர்மையற்ற செயல்.  நான் லாபியே செய்யவில்லை.  போலீஸ் அங்கிள்ஸ் அவங்களா ஆக்ஷன் எடுத்தாங்க என்ற அம்புலிமாமா கதையையெல்லாம் உங்களுக்கு ட்விட்டரில் சொம்படிக்கும் அம்பிகளிடம் சொல்லுங்கள்.
உங்கள் தாயரைப் பற்றித் தவறாக எழுதியிருப்பதற்காக கொதிக்கும் நீங்கள்,   உங்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக தினத்தந்தியிலும், மாலை மலரிலும் கைது செய்யப்பட்டவர்கள் குறித்து, செய்தி வந்ததால்  அவர்களுக்கு நேர்ந்த அவமானத்தை எப்படி சரி செய்யப்போகிறீர்கள்… ?  “நானும் மம்மியும் மறுப்பு தெரிவிச்சோம்… ஆனா அவங்க போடல..“ என்று நொள்ளைக் காரணத்தைச் சொல்லாதீர்கள்… தவறான செய்தி போட்டதற்காக மாலை மலர் மீதும், தினத்தந்தி மீதும் அவதூறு வழக்கு தொடுப்பீர்களா… ?   செய்ய மாட்டீர்கள்… ஏனென்றால் உங்களின் பிரபலம் என்ற நிலையை நிறுத்திக் கொள்ள அந்த ஊடகங்களின் தயவு வேண்டும்.
2009ல் ஜெயலலிதாவை சந்தித்த சின்மயி, அந்த அனுபவத்தை எப்படி சிலாகித்து எழுதியிருக்கிறார் பாருங்கள்..
I sent a few letters over all these days and somehow things didn’t really move. I have been an admirer for her sheer gumption. For her grit and determination. Remember watching her Rendezvous with Simi Garewal several years ago. I loved that interview. I have heard of the struggles that she has gone through and idolized her.
Finally the call came from her office a couple of days ago and I met her on Wednesday.
We walked in after being ushered into the premises, and to her chamber and was awestruck by her aura. She has this brilliant glow about her. It was likewhoah. She looks very regal. And also noticed that she is super beautiful. I was stunned and the first words I said was like wow or cool or something like that. Then the next thing that crossed me mind – countless pictures and videos of her all these days …no one has ever done any justice or has been able to capture her magic or her presence. Or let me say, that I am yet to come across a picture that has.
It took me a while to find my words in my momentarily awed state and then she spoke to me for a while asking how I have been, how many songs I have sung, what I have been singing and what I intend to do. She also told me that I hardly sound like an indigenous singer. I think I have never giggled and smiled so much as that evening with a person I was meeting for the first time. I am quite sure I babbled a lot. And she was looking amused. I don’t know whether I impressed her at all. She spoke to mom for a while as well on my mom’s work.
I have heard lots of artistes mentioning that she is highly gracious and kind and I was able to experience her mehmaan nawaazi, first hand.
It was one of the loveliest times I have had and she really made us feel at ease. Loved her English, the way she spoke. She was hyper cool. I am an even bigger fan of hers now.
The thing is, once mom and I stepped out, there was clicking and all that. We got into our car and drove about 20 meters, a photographer asked us to stop and asked why we had come and what had been spoken. And took pictures. Someone even asked whether I was getting married and whether that was the reason. Now why is the marriage thing assumed? Of all things? I was wondering what can be so special about a singer meeting her. Its not as if I am some super important person or something and yes, we had to explain in detail and reluctantly allow some more pictures to be taken. Was wondering what was going to be written. This was a totally new experience, something I have never come across before.
This sure will be one of most memorable evenings of my life. Its not everyday that someone like me gets to spend some time with her one on one. And when the memory of the meeting crosses my mind, all I can do is grin. She is totally wow.
550315_481468121886511_1313225545_n
சாரி பாஸ்… படம் தப்பாயிடுச்சு..
நீங்கள் சொல்லும் அந்த Totallly Wow பெண்மணி, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை பதிபக்தி இல்லாதவர் என்று விமர்சித்துள்ளார் என்பது உங்களுக்குத் தெரியுமா சின்மயி… ?  திமுக தலைவர் கருணாநிதியைப் போல சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டவர்கள் யாருமே கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா ?  சோனியா காந்தியை ட்விட்டரில் வலதுசாரி இந்துத்துவா சக்திகள் எப்படியெல்லாம் விமர்சிக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா ?  அவர்களெல்லாம் போலீஸ் அங்கிள்களை நாடிச் செல்வதில்லை.   ஒன்று அந்த விமர்சனங்களை எதிர்கொள்கிறார்கள்.  அல்லது உதாசீனப்படுத்துகிறார்கள். உங்களுக்கு இருக்கும் பன்முகத் திறமைகளால், அரசியலிலும் இறங்கும் ஆசை இருக்கலாம்.   சமூகத்தை விமர்சிக்க வேண்டும் என்ற உணர்வும் இருக்கலாம்.  அப்படி இருக்குமென்றால், இன்றும் நூறாண்டுகளைக் கடந்தாலும், ஆணாதிக்க சமூகமாகவே இருக்கப்போகும் இந்த சமூகத்தை எதிர்கொள்ள பழகிக் கொள்ளுங்கள்.  அதுவே உங்களை உறுதியுள்ளவராக்கும்.  அம்மாவின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு, போலீஸ் அங்கிளிடம் புகார் சொல்வது உங்களை நீங்களே சிறுமைப்படுத்திக் கொள்ளும் செயல் மட்டுமல்ல… பிரபலமானவர் என்ற உங்களின் நிலைமையை துஷ்பிரயோகம் செய்யும் செயல்.
ஜெயலலிதாவை சந்தித்ததால் உங்களுக்கு அவரோடு நெருக்கம் என்று நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் மாயையும், ஜெயலலிதாவின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதால் ஜெயலலிதாவுக்கு உங்களை ரொம்பவும் பிடிக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பல அதிகாரிகளையும் வைத்தே இந்த வழக்கும், கைது நடவடிக்கைகளும் நடந்தேறியிருக்கின்றன.  நாளை வேறு ஒரு பெண், இதே போன்ற புகாரை காவல்துறையில் அளித்தால், அது கமிஷனர் அலுவலக குப்பைத் தொட்டிக்குத்தான் போகும்.
ட்விட்டரில் எத்தனையோ பிரபலங்கள் இருக்கிறார்கள்.  உங்களை விடப் பிரபலமானவர்களும் இருக்கிறார்கள். அமிதாப்பச்சன், ஷபனா ஆஸ்மி,  போன்றவர்களும் இருக்கிறார்கள். அமிதாப்பச்சன் அபிஷேக் பச்சன், ஷபனா ஆஸ்மி போன்றோர் உங்களையும், உங்கள் அம்மாவையும் விட பிரபலமானவர் என்று ஒப்புக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.  அவர்கள் உங்களைப் போல பொறுப்பற்ற முறையில் ட்விட்டரைப் பயன்படுத்துவதில்லை.  தாங்கள் பிரபலம் என்பதை நன்கு உணர்ந்து கவனமாகவே ட்வீட் செய்கிறார்கள்.    பொறுப்பற்ற முறையில்  cattle class என்று ட்வீட் செய்த மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் சஷி தரூர் தன் அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டதை நினைவில் வையுங்கள்.  பொறுப்பற்ற முறையில் ட்வீட் செய்யும் பிரபலங்கள், அதற்குண்டான விளைவுகளையும் அனுபவித்தே ஆக வேண்டும்.
அத்தகையை பொறுப்போடு இல்லாத பிரபலங்கள், என் கருத்தை நான் சொல்ல எனக்கு சுதந்திரம் இருக்கிறது என்று கூறும் பிரபலங்கள், அவர்களின் செயல்களுக்காக வரும் எதிர்வினையை பக்குவத்தோடு எதிர்கொள்ள வேண்டும்.
எழுத்தாளர் மீனா கந்தசாமி மாட்டிறைச்சியை உண்ணும் திருவிழாவை ஆதரித்து எழுதியதற்காக அவரது தனிப்பட்ட வாழ்வைக் கூட விமர்சனம் செய்து எத்ததை ட்விட்டுகள் வந்திருக்கின்றன தெரியுமா ? மீனா கந்தசாமி, ஐதராபாத் உஸ்மானியா பல்கலைகழகத்தில் நடந்த மாட்டிறைச்சி திருவிழாவைப் பற்றி ட்வீட்டுகள் போட்டதற்காக அவரை எப்படி விமர்சனம் செய்திருக்கிறார்கள் பாருங்கள்….
 Untitled-1
இந்த தரங்கெட்ட விமர்சனத்திற்கு, மீனா கந்தசாமியின் பண்பான பதிலைப் பாருங்கள்.

Untitled-2 
மீனா கந்தசாமியும் நீங்களும் ஒரே வயதுடையவர்தான்.  அவர் தன் மீதான தரங்கெட்ட எதிர்வினைக்கு இப்படி துணிச்சலான பதிலைத் தருவதற்கு காரணம் அவரின் அரசியல் புரிதல். தன்னுடைய புரட்சிகரமான கருத்துக்களுக்கு இப்படித்தான் எதிர்வினை வரும் என்பதை நன்கு உணர்ந்தவர் மீனா கந்தசாமி.   உங்களுக்கு அந்தப் புரிதல் இல்லை.  இதனால்தான் மீனா கந்தசாமி உங்களைப் போல போலீஸ் அங்கிள்களை நாடிப் போகவில்லை.  அப்படியே போயிருந்தாலும், மீனா கந்தசாமிக்கு உங்களைப் போல உதவ மீசைக்கார போலீஸ் அங்கிள் இல்லை.
Madam, ur songs are so lovely mam. 
I am not eating anything for one week. Just listening to ur songs.  
U r the savior of music. 
Mam please sing a song for the peace of this world and rescue this world mam. 
Mam please sing a song and diffuse this power crisis. 
Mam please sing and control rising prices of essential commodities
என்று சொம்படிக்கும் அம்பிகளின் ட்வீட்டுகளை மட்டுமே எதிர்ப்பார்த்திருந்த உங்களுக்கு, உங்களின் இட ஒதுக்கீடு குறித்த அரைகுறையான கருத்துக்கு வந்த கடுமையான எதிர்வினைகள் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.  இது போல உங்களை பாராட்டிக் கொண்டு மட்டுமே இருக்கவேண்டும் என்றால் என்றால், நீங்கள் ஜெயலலிதாவைப் போல ஆக வேண்டும்.   அப்போதுதான் உங்களுக்கு நல்ல அடிமைகள் கிடைப்பார்கள்.   அப்படியே அடிமைகள் கிடைத்தாலும், ட்விட்டரில் கிழிப்பதை நிறுத்த மாட்டார்கள்.  நீங்களும் உங்கள் தாயாரும் உணர வேண்டியது, நீங்கள் ஜெயலலிதாவும் அல்ல… அவர் சந்தியா தேவியும் அல்ல என்பதையே.
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் நேற்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது, சின்மயி விவகாரத்தில் சட்டம் தன் கடமையை முழுமையாகச் செய்துள்ளது.  தீர விசாரித்தபிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது  சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது என்று கூறியுள்ளார்.  மகிழ்ச்சி.  அப்படிப் பேசிய ஜார்ஜ், சமூக வலைத்தளங்களில் இது போல பெண்களை துன்புறுத்துபவர்கள் குறித்து இது வரை 19 புகார்கள் வந்துள்ளன என்று கூறியிருக்கிறார்…
மிஸ்டர் ஜார்ஜ்  அந்த 19 பெண்களின் மானத்தை விட சின்மயியின் மானம் எந்த வகையில் உயர்ந்து விட்டது ?   அந்த 19 புகார்களின் மீது சாவகாசமாக விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் நீங்கள் சின்மயி கொடுத்த புகாரின் மீது மட்டும் ஒரே நாளில் எப்ஐஆர் போட்டு, ஒரே நாளில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தது ஏன் ?  பிரபலமானவர்களை விட, பாமரர்களையும், சாதாரண மக்களையும், விவிஐபி அல்லாதவர்களையும் பாதுகாப்பது உங்கள் வேலையில்லையா ?   அவர்கள் குறைகளை நீங்கள் முன்னின்று தீர்க்க வேண்டாமா ?
சின்மயிக்கு ஏதோ பாட்டுப் பாடத் தெரிகிறது.. பாட்டுப் பாடிப் பிரபலமாகி விட்டார்.  பாட்டுப் பாடத் தெரியாமல், காக்கா ராதாகிருஷ்ணன் போல குரல் இருப்பவர்கள் எப்போது பாட்டுப் பாடி, எப்போது பிரபலமாகி, எப்போது புகார் கொடுப்பது.  வேண்டுமென்றால், சென்னை மாநகரக் காவர்துறையில் பிரபலமானவர்கள் பிரிவு என்றும், பிரபலமல்லாதவர்கள் பிரிவு என்றும் தனித்தனிப் பிரிவை ஏற்படுத்தி விடுங்கள்.  சாதாரண மக்கள் அந்தப் பிரிவில் புகார் கொடுக்க வசதியாக இருக்கும்.
george1
ஆனால் ஒரு விஷயத்திற்காக சவுக்கு ஜார்ஜை மனந்திறந்து பாராட்டுகிறது.  எந்த வழக்கில் ஒரு நபர் கைது செய்யப்பட்டாலும், அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர்கள் நிரபராதிகளே.   ஆனால், அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது போலவே கைது செய்யப்பட்ட அன்றே அவர்களை தொலைக்காட்சிகளில் படம் பிடிக்க வைத்து, செய்தித்தாள்களில் புகைப்படம் வர வைத்து, அவர்கள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல் இருக்கிறதே…  அதை வார்த்தைகளால் வர்ணிக்கவே இயலாது.  அவர்கள் அந்த வழக்கிலிருந்து குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட்டாலும், வெளியான காட்சிகள், புகைப்படங்கள் ஏற்படுத்தும் வடு ஒரு நாளும் அழியாது.  அதுவும் தினத்தந்தி முருகேசன் போன்ற தலைச்சிறந்த நிருபர்கள், அம்புக்குறியிட்ட இடத்தில் இருக்கும் கையை வைத்துதான் அவர் சின்மயிக்கு எதிரான ட்விட்டை எழுதினார் என்று கூசாமல் செய்தி வெளியிடுவார்கள். நேற்று கைது செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களை ஊடகங்களுக்கு வெளியிடாமல் தடுத்ததற்காக, மாநகர ஆணையாளர் ஜார்ஜுக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.
இரு தரப்பிலும் உள்ளவர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து, மேற்கொண்டு பிரச்சினையை வளர்க்காமல், இந்தப் பிரச்சினைக்கு முடிவு தேடுவார்கள் என்று சவுக்கு நம்புகிறது.  காவல்துறைக்கு எத்தனையோ வேலைகள் இருக்கிறது.  உங்கள் குழாயடிச் சண்டைகளை தீர்த்து வைப்பது அவர்கள் வேலையல்ல.  வேலை வெட்டியில்லாமல், நீங்கள் இணைத்தில் போடும் வெட்டிச் சண்டைகளுக்கு பஞ்சாயத்து பண்ணும் வேலையில் ஈடுபடுவதால், காவல்துறை மற்றும் நீதிமன்றத்தின் நேரமே வீணாகிறது.
பொறுப்போடு செயல்படுங்கள்.

கருத்துகள் இல்லை: