மாலைமலர் :
சென்னை - சேலம் பசுமை வழிச்சாலைக்காக மரம்
வெட்டியவர்களை கைது செய்யாவிட்டால், கடும் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என
சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ChennaiSelamExpressWay #MadrasHC சென்னை: சென்னை - சேலம் பசுமை வழிச்சாலைக்கு சட்டவிரோதமாக மரம் வெட்டப்படுவதாக தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு வழக்கறிஞரை நீதிபதிகள் கேள்விகளால் துளைத்து எடுத்தனர். தொடக்கத்தில் இருந்தே இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் ஆர்வம் காட்டவில்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். வழக்கு விசாரணைக்காக அரசு வழக்கறிஞரை பத்திரிக்கை வைத்து அழைக்க வேண்டுமா?.
எந்த தகவலும் இல்லை அவகாசம் வேண்டும் என்றே கூறுகின்றீர்கள். என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வெட்டிய மரங்களுக்கு பதிலாக எத்தனை மரங்கள் நடப்பட்டன?. சட்ட விரோதமாக மரம் வெட்டியவர்களை கைது செய்ய வேண்டும். இல்லை என்றால் கடும் உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறி வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக