திங்கள், 8 அக்டோபர், 2018

சிலை கடத்தல் .. பெண் தொழிலதிபர் கிரண் ராவ் வெளிநாடு செல்ல தடை ..


தொழில் அதிபர் ரன்வீர்ஷாவின் நண்பர் கிரண்ராவுக்கு ‘லூக் அவுட்’ நோட்டீஸ்தினத்தந்தி : கிரண்ராவ், வெளிநாட்டிற்கு தப்பி செல்லாமல் இருப்பதற்காக, அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை, சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் வசித்து வருபவர் ரன்வீர்ஷா. தொழில் அதிபரான இவரது வீட்டில் பழமையான கோவில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
 இதையடுத்து அவரது தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொழில் அதிபர் ரன்வீர்ஷா வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் கலைநயமிக்க கல்தூண்கள், பழமையான கோவில் சிலைகள் உள்பட 91 கலைப் பொருட்கள் சிக்கியது.
 இதையடுத்து ரன்வீர்ஷா சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவர் வெளிநாடு தப்பி சென்று விடக்கூடாது என்பதற்காக அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லூக் அவுட்’ நோட்டீசு அனுப்பப்பட்டது.

கைப்பற்றப்பட்ட சிலைகள், கல்தூண்கள் குறித்து ரன்வீர்ஷாவிடம் நேற்று முன்தினம் விசாரணை நடத்துவதற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் வக்கீல் மூலம் கால அவகாசம் கேட்டார்.

இதைத் தொடர்ந்து பெண் தொழில் அதிபரான கிரண் இல்லத்தில் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினார்கள். அப்போது பூமிக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த கலைநயமிக்க 2 கல்தூண்கள் கண்டெடுக்கப்பட்டது. 

இந்தநிலையில், ரன்வீர் ஷாவின் நண்பர் கிரண் ராவுக்கு லுக் அவுட் நோட்டீஸை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்  அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.  கிரண் ராவின் வீட்டில் இருந்து 22 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில்  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை: