சனி, 13 அக்டோபர், 2018

சின்மயி போன்றவர்களின் ஆள்சேர்க்கும் பின்னணி அம்பலம்! மற்றுமொரு ஆர் எஸ் எஸ் சதி


Shivakumar.TD : சின்மயி போன்ற நம்பகத்தன்மை இல்லாத பெண்களால் முன்னெடுக்கப்படும்
அவருடைய தலைமையின் கீழ் ஒன்று திரட்டப்படும் #Metoo இயக்கத்தால் சமூகத்தில் அடித்தட்டு பெண்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எந்த நன்மையும் விளையாது
உதாரணம் : ஆளுநர் நிர்மலா தேவி மூலம் பாதிக்கப்பட்டஅருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகள் அவர்களுக்காக இவர் ஏன் குரல் எழுப்ப வில்லை?
தேனி ராகவி என்ற பனிரெண்டு வயது பெண் பாலியல் வன்முறையால் கொலை செய்ய பட்டாள் அப்போது சின்மயி எங்கே இருந்தார்?
மேலும் சமூகத்தில் பின்தங்கிய இனத்தைச் சேர்ந்த எத்தனையோ பெண்கள் இத்தகைய துன்பங்களை அனுபவிக்கிறார்கள் அவர்களுக்காக எல்லாம் போராடினாரா ?
தங்கள் துறை சேர்ந்த பெண்ணின் (சுருதி லீக்ஸ்) குற்றச்சாட்டையே மறுத்து அவருக்கு பைத்தியம் என்று பட்டம் சூட்டிய கல் நெஞ்சம் கொண்டவர்,
உயர்குடியில் இருந்து கொண்டே காலங்காலமாக இன ரீதியாக/சாதி ரீதியாக பாலியல் ரீதியாக ஒடுக்கப்படும் மக்களுக்காக பெண்களுக்காக எந்த குரலும் எழுப்பாமல்,
தங்கள் பிரச்சினைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து கொள்வதோடு அதற்கு எளிய மக்களை துணைக்கு அழைத்துக் கொண்டு சுயநலத்திற்கு ஆள் சேர்ப்பவர்கள்  சின்மயி போன்றவர்கள்,

இவர்களின்  போலிப் போராட்டத்துக்கு பாதிக்கப்பட்ட இளம்பெண்களான நீங்கள் வலு சேர்ப்பதில் உங்களுக்கு எந்த பயனும் இல்லை.
உங்களை பயன்படுத்தி கொண்டு தான் பயனை அடைந்த பிறகு இதே வைரமுத்து போன்றவர்களுடன் இசை வித்வான்கள் போன்றவர்களுடன்
சின்மயி போன்றவர்கள் திரும்பவும் தொழில் ரீதியாக இணைய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
எனவே #Metoo போராட்டத்தை சின்மயி போன்ற பெண்ணின் அடையாளத்தின் கீழ் அணி திரள வேண்டாம்
இதே வைரமுத்து மீதோ இசை வித்துவான்கள் மீதோ உங்களுக்கு புகார் இருந்தால் சின்மயி யிடம் ஏன் சொல்ல வேண்டும்.
அவர் யார் இதற்கு தலைமை தாங்க?
அவருக்கு என்ன தகுதி இருக்கிறது
இதை பற்றி பேச நீங்கள் வெளியே வாருங்கள்!
முடிந்தால் இந்த போராட்டத்துக்கு நீங்கள் தலைமை தாங்கி நடத்துங்கள்.
வைரமுத்து வால் இசை வித்வான்களால் பாதிக்கப்பட்டவர்கள்
அவர்களுடைய முகத்திரையை ஆதாரங்களோடு கிழித்து எறியுங்கள்
சின்மயியை விலகச் சொல்லுங்கள் அவருடைய முகம் உங்களுக்கு தேவையில்லை
இன்று தான் ஒரு தனி மனிதி என்று தொலைக்காட்சியில் பேட்டி அளிக்கிறார்
அந்த தனிமனிதி யாருடன் அணி சேர்ந்துள்ளார் என்பதற்கு இந்த இணைப்பே ஆதாரம்
(மாபா பாண்டியராஜன்
பானு கோம்ஸ்
சுமந்த் சி ராமன்
ஷ்யாம் சேகர்
தந்தி டிவி
போன்றவர்களுடன் சின்மயியும்
இணைந்துள்ளார்
முகநூலில் பாஜக ஆர்எஸ்எஸ் இந்த இயக்கங்களை விமர்சனம் செய்பவர்களை ஆராய்ச்சி செய்ய
இந்த இளம் சிந்தனையாளர் அமைப்பு
அமைக்கப் பட்டுள்ளது)

கருத்துகள் இல்லை: