சனி, 13 அக்டோபர், 2018

டெல்லி வங்கி காசாளரைக் கொன்று 3லட்சம் கொள்ளை! CCTV விடியோ


CCTV footage of a corporation bank being robbed in Delhi's Khaira yesterday by armed assailants. Cashier was shot dead. Investigation underway.
NDTV : மேற்கு டெல்லியில் உள்ள சாவ்லா நகரில் இருக்கும் கார்பரேஷன் வங்கியில் இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. New Delhi: புதுடெல்லி: நேற்று ஆயுதம் ஏந்திய ஆறு முகமூடி கொள்ளையர்கள் டெல்லியில் உள்ள வங்கியில் காசாளரைக் கொன்று ரூ.3 லட்சத்தை கொள்ளையைடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் வங்கியில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 90 நொடிகள் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சியில், வங்கிக்குள் நுழைந்த கொள்ளையர்கள் வங்கி காவலரை தாக்கி அவரிடம் இருந்து துப்பாக்கியை வாங்கி காசளரை சுட்டுவிட்டு பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம், மேற்கு டெல்லியில் உள்ள சாவ்லா நகரில் இருக்கும் கார்பரேஷன் வங்கியில் நிகழ்ந்துள்ளது.
; இதுகுறித்து போலீசார் கூறுகையில், கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில், 16 பொது மக்களையும், 6 வங்கி ஊழியர்களையும் பிடித்து வைத்திருந்தனர். கொள்ளையர்கள் முதலில் காசாளர் சந்தோஷிடமிருந்து பணத்தை பறித்து செல்லவே முற்பட்டனர். அவர் தடுத்ததும் துப்பாக்கியால் சுடப்பட்டார். உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சந்தோஷ் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
சிசிடிவி காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை அடையாளம் கண்டுவிடலாம் என்று டெல்லி போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் கொள்ளையர்கள் சோனிபட் மற்றும் நாஜஃப்கார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களில் ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மீதி கொள்ளையர்களை கண்டுபிடிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்

கருத்துகள் இல்லை: