Ajeevan Veer : மைத்ரிக்கு அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் வெற்றி பெற்று
ஜனாதிபதியாக வேண்டும் என ஆசை.
அடுத்த முறை அவருக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என ஐதேக முடிவெடுத்துள்ளது. அதை அவருக்கு சொல்லியும் விட்டார்கள்.
Siva Kuruparan மகிந்த ஆட்சிக்கு வந்தால் போர்க்குற்றம் மற்றும் ஏனைய விடயங்களுக்கு மேற்குலகின் அழுத்தத்தை பெறுவதுடன் இலங்கைக்கான மேற்குலகின் ஆதரவு குறைவடையும், சீனாவின் ஆதரவு அதிகரிக்கும், டொலர் சிக்கல் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் போது அந்த நிலை ஐக்கிய தேசிய கட்சியை முற்றுமுழுதான அரசில் ஏனையோரின் ஆதரவற்று ஆட்சி அமைக்க வழி ஏற்படுத்தாதா அண்ணா?
Ajeevan Veer போர் குற்றத்தை அவர்கள் இழுத்தடித்து சமாளிப்பார்கள். ஆனால் டிரையல் அட்பார் நீதிமன்ற வழக்குகள் மற்றும் FCID விசாரணைகள் எப்படி ஆகுமோ தெரியாது. குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அரசியலே செய்ய முடியாது. அதிலிருந்து மீள வேண்டும் என மகிந்த நினைக்கிறார். சீனாவை விட்டு மகிந்த இந்தியா பக்கம் சரிய வேண்டியுள்ளது. இந்தியாவை ஆதரிக்காவிடில் மகிந்தவை இந்தியா வர விடாது. மைத்ரியிடம் காவல்துறை அதிகாரம் இல்லை. அது ரணிலிடம் இருக்கிறது. பபுரித ரணிலின் ஆள். அவரை வைத்துக் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் குளறுபடி செய்ய முடியாது. அதற்காக அவரது ஆள் தேவை. சற்று குழப்பமான நிலை?

எனவே அடுத்த ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து நல்லாட்சியை கலைத்து இடைக்கால
அரசொன்றை உருவாக்கும் முயற்சியொன்றில் மைத்ரி ஈடுபட்டு வருகிறார்.
அதற்காக மகிந்த தரப்பின் ஒத்துழைப்பை நாடியுள்ளார். மகிந்த தரப்பு FCIDயை ஒழித்து தங்களது ஆதரவாளர் ஒருவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக்கச் சொல்லி டிமான்ட் பண்ணியுள்ளது.
மகிந்த தரப்பின் தற்போதைய தேவை தமக்கான வழக்குகளிலிருந்து தம்மைக் காத்துக் கொள்வதுதான். இப்போதைய நிலையில் ஆட்சியை பொறுப்பேற்க மகிந்த விரும்பவே மாட்டார். காரணம் இந்த இரண்டு வருடங்கள்தான் மகிந்த தரப்பு எடுத்த கடன்களின் வட்டியை ஒட்டு மொத்தமாக கட்ட வேண்டிய காலமாகும். இது அரசுக்கு ஒரு பெரிய சவால். இந்த நேரத்தில் மகிந்த, அரசை கையிலெடுக்க அவ்வளவு பைத்தியக்காரர் இல்லை.
தற்போதைய வாழ்கை சுமைகளால் அடுத்த தேர்தலில் மகிந்தவின் பக்கம் மக்கள் திரும்ப வாய்பாகும் என, அவர் நம்புகிறார்.
கடந்த முறை , ரணிலை வீட்டுக்கு அனுப்ப மைத்ரி நடத்திய நம்பிக்கையில்லா பிரேரணை படு தோல்வியில் முடிந்தது. கடைசியில், ரணிலை அனுப்ப ஓடித் திரிந்த 15 பேர் நடுத் தெருவுக்கு வந்ததுதான் மிச்சம். உள்ளூராட்சி தேர்தலில் வீழ்ச்சியடைந்திருந்த ரணிலின் செல்வாக்கு, நம்பிக்கை இல்லா பிரேரணைக்குப் பின்னர் உயர்ந்தது.
இன்றைய நிலையில் , பாராளுமன்ற பதவியில் இருக்கும் எவரும் ஆட்சி கவிழ்வதை விரும்ப மாட்டார்கள். எனவே என்ன பிரச்சனையிருந்தாலும் கட்சி தாவ மாட்டார்கள். ரத்தன தேரர் போன்ற ஒருவர் வெளியேறலாம். அந்த இடத்துக்கு வர மகிந்த கட்சியில் உள்ள சிலர் ரெடியாகவே உள்ளனர். இடம் கிடைத்தால் புகுந்திடுவார்கள்.
ஆனால் மைத்ரியிடம் , மகிந்த இடைக்கால அரசொன்றை அமையுங்கள் ஆதரவு தருகிறோம் எனச் சொல்லக் கூடிய வாய்ப்பு உண்டு. அதனால் மாட்டிக் கொண்டு மைத்ரிதான் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். அது மைத்ரியை மக்கள் அடியோடு வெறுக்கும் நிலைக்கு தள்ளும். விலை வாசியேற்றம் - டொலரின் பெறுமதி உயர்வு - கடன் தொல்லை என பிரச்சனை மேல் பிரச்சனையை மைத்ரி தனியாக சந்திக்க நேரிடும்.
அதிகம் பிரச்சனையானால் ரணில் வெளியேறி அரசியலை விட்டு ஒதுங்கலாம் என சிலர் சொல்கிறார்கள். ரணில் இருப்பதால்தான் ஐதேக கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. அவர் வெளியேறினால் பெரும் போராட்டமாகிவிடும்.
ரணில் வெளியேறி மைத்ரி - மகிந்த ஆகியோர் இடைக்கால அரசு ஒன்றை நடத்த முற்பட்டால் அதுவும் கடும் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி வரும். அது மீண்டும் ஐதேகவை ஆட்சியில் அமர்த்தலாம். ஆனால் ரணில் தலைமை பொறுப்பை வேறொருவரிடமே கொடுப்பார். அவர் தொடர மாட்டார்.
இந்த முறை மைத்ரியின் ஆட்டம் தோல்வியில் முடிந்தால் அவர் மீண்டு வருவது சிரமம்தான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக