விகடன் :முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பின் காரணமாக சென்னை தனியார்
மருத்துவமனையில் காலமானார். 58 வயதான அவர் ஆறு முறை தமிழக சட்ட மன்ற
உறுப்பினராக இருந்த பெருமைக்குரியவர். 2006 11ம் ஆண்டு கருணாநிதி
தலைமையிலான தமிழக அமைச்சரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக
இருந்தவர். அதற்கு முன்னதாக 1996 - 2001 காலகட்டத்தில் தமிழக
சட்டப்பேரவையில் துணை சபாநாயகராகப் பதவி வகித்தார். பின்னாளில் 2013ம்
ஆண்டு திமுகவில் இருந்த விலகிய அவர், ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில்
இணைந்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அரசியலில் அமைதியாக இருந்து வந்தார். இந்நிலையில், சசிகலா - ஓ.பன்னீர் செல்வத்தின் பிரிவின்போது, ஓ.பி.எஸ் அணியின் பக்கம் சென்றார் பரிதி. சமீபத்தில் டிடிவி தினகரனுடன் இணைந்தார்.
இதற்கிடையே, இன்று காலை அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு
ஏற்பட்டதையடுத்து சென்னை அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். அங்குச் சிகிச்சை பலனளிக்காததின் காரணமாகப் பரிதாபமாக
உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்
தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக