tamilthehindu :
சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் மறைவு கிராமங்களில் இருந்து
அகில இந்திய தேர்வுகளை எழுத விரும்பிய ஏழை-எளிய மாணவர்களுக்கும் பேரிழப்பு
என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளாக நினைக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்த சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் திடீரென்று மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கும், அவரை நம்பியிருந்த எண்ணற்ற இளைஞர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டின் நிர்வாக கட்டமைப்புக்கு தேவையான ஆயிரத்திற்கும் மேற்பட்ட
ஐஏஎஸ், ஐபிஎஸ் என பல அரசு அதிகாரிகளை உருவாக்கி, தமிழகத்தின் தலைநகராம்
சென்னையில் வெற்றிகரமாக ஐஏஎஸ் அகாடமிகளை நடத்த முடியும் என்பதை
நிரூபித்துக்காட்டிய அவரது மறைவு, இளைஞர்களுக்கும், கிராமங்களில் இருந்து
அகில இந்திய தேர்வுகளை எழுத விரும்பிய ஏழை-எளிய மாணவர்களுக்கும்
பேரிழப்பாகும்” என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக