இவரின் கணவர் மகேஸ்வரனை (நாடாளுமன்ற உறுப்பினர்) புலிகள் கொழும்பில் வைத்து சுட்டு கொன்றார்கள் . எனினும் தேர்தல் வாக்குகளை மனதில் வைத்துகொண்டு தனது கணவனை சுட்டு கொன்ற புலிகளுக்கு ஆதரவான கலரி ரசிகர்களை மனதில் வைத்து புலி பிரசார கருத்துக்களை கூறிவருவது தெரிந்ததே..
மாலைமலர் : புலிகள் குறித்து கருத்து சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்த இலங்கை மந்திரி கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் யாழ்ப்பாணத்தில், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இலங்கை மந்திரி விஜயகலா விடுதலைப்புலிகள் குறித்து பேசியது கடும் சர்ச்சையானது.
விஜயகலா பேசும் போது, “ தமிழர்களின் நிலங்களை திரும்பக் கொடுத்த இலங்கை அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தலையால் நடந்தே ஜனாதிபதியை நாங்கள் தேர்வு செய்தோம். ஆனால் ஜனாதிபதி எங்களுக்கு என்ன செய்தார்?
விடுதலை புலிகள் காலத்தில் நாங்கள் எப்படியான வாழ்க்கை வாழ்ந்தோம் என்பது எங்கள் அனைவருக்குமே தெரியும். எனவே வடகிழக்கு மாகாணங்களில் மக்கள் நிம்மதியாக வாழவேண்டுமானால், எங்களுடைய பிள்ளைகள் நிம்மதியாக வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பவேண்டுமாக இருந்தால் புலிகளின் கைகள் வடகிழக்கு மாகாணங்களில் ஓங்கவேண்டும்.
விடுதலை புலிகளை வடகிழக்கு மாகாணங்களில் உருவாக்கவேண்டும்” இவ்வாறு விஜயகலா பேசினார். விஜயகலா பேச்சு சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததாக கூறி, உடனடியாக அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், மேற்கூறிய பேச்சு தொடர்பாக, விஜயகலாவுக்கு அந்நாட்டு குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி, இன்று காலை போலீசார் முன்பு ஆஜரான விஜயகலா கைது செய்யப்பட்டார். இதையடுத்து, கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட விஜயகலா, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்

2 கருத்துகள்:
எப்படி இப்படியான தவறான தகவலகளை பெறுகின்றீர்கள் எனபது தெரியவில்லை.
மகேஸ்வரன் கொலை ஜோதபாயாவின் ஆதரவு பெற்ற இலங்கை புலனாய்வு துறையால
செய்யபட்டது .சிங்கள் கட்சியில் இருந்தாலும் சிங்களத்தில் திறமையாக பேசக்கூடிய மகேஸ்வரன் சிங்கள் ஊடகங்களில் புலிகளுக்கு சார்பான கருத்துக்களை கூறி வந்த நிலையில் இந்த கொலை நடைபெற்றது
.jaffnanewsplus.co :எனது அண்ணன் மகேஸ்வரனை கொன்றது புலிகளே – நான் அரசியல் பேசவில்லை – துவாரகேஸ்வரன் அதிரடி பதிவு!
d by அம்பலத்தான்
எனது சகோதரரான முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனை புலிகள் தான் சுட்டுக் கொன்றார்கள். இதை நான் உறுதிபடக் கூறுகின்றேன். எனக்கு அரசியல் இலாபம் தேவையில்லை என்று புலிகளால் படுகொலை செய்யப்பட்ட மகேஸ்வரனின் சகோதரரான துவாரகேஸ்வரன் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
விஜயகலாவின் கணவரும் முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரன் படுகொலை தொடர்பில் அவர் இறந்த காலத்திலிருந்து பெரும் சர்ச்சைகள் எழுந்துவந்த நிலையில் அதன் பங்கு யாருடையது என்ற உண்மை நிலை அரசியல் காரணங்களுக்காக மனைவி விஜயகலாவால் இதுவரை இருட்டடிப்புச் செய்யப்பட்டு வந்தாலும் அதன் உண்மைநிலையை மகேஸ்வரனது சகோதரர் துவாரகேஸ்வரன் தனது முகநூல் பதிவில் மீண்டும் ஒருமுறை தெளிவாகப் பதிவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்தவாறு ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பிரானவர்தான் அமரர் முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன்.
இவரது வரவு விடுதலைப்புலிகளுக்கு விரோதமானதாக அமைந்திருந்தது. இதனால் புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் இளம்பருதியால் எச்சரிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார் மகேஸ்வரன்.
MP யான மகேஸ்வரன் சிறிது காலத்தில் யாழ் மாவட்டத்தில் தனது வியாபார தளத்தை விரிவாக்கினார். இது புலிகளுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்தது. இதனால் யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளின் பார்வையில் துரோகியாக துரத்தப்பட்டார் மகேஸ்வரன்.
ஆனாலும் தான் எப்படியும் அரசியல் பிரதிநிதியாக வரவேண்டும் என நினைப்புக் கொண்டு பல முயற்சிகளை மேற்கொண்டார் மகேஸ்வரன். இதனால் புலிகளின் புலனாய்வு துறையினராலும் அரசியல்துறை பொறுப்பாளராலும் பலமுறை எச்சரிக்கை செய்யப்பட்டார் .
தொடர்ந்தும் தனது செயற்பாடுகளை முன்னெடுத்தமையால் மகேஸ்வரனுக்கு உயிர் அச்சுறுத்தலை புலிகள் விடுத்திருந்தனர். ஆனாலும் புலிகளுக்கு சவால் விடுத்து தனது தேர்தல் களத்தை கொழும்புக்கு மாற்றினார் மகேஸ்வரன்.
கருத்துரையிடுக