புதன், 10 அக்டோபர், 2018

கலைஞர் பெயரை தார் பூசி அழித்து விட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்ஜியார் பெயரை வைத்த கயவர்கள்


LR Jagadheesan : எத்தனையோ துணைநடிகர்களில் ஒருவராக இருந்த
எம்ஜிஆருக்கு சினிமாவில் முக்கிய வேடங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கிக்கொடுத்து கயாநாயகனாக வளர வழி ஏற்படுத்திக்கொடுத்தவர் கலைஞர்.
பழுத்த காங்கிரஸ்காரராக இருந்த ராமச்சந்திரமேனனை திராவிடர் இயக்கம் பக்கம் ஈர்த்து “புரட்சிநடிகர்” ஆக்கி எம்ஜிஆரின் எதிர்கால அரசியல் வளர்ச்சிக்கு வித்திட்டவரும் அதே கலைஞர்.
அண்ணா மறைந்தபின் எம்ஜிஆருக்கு திமுகவில் முக்கிய கட்சிப்பதவிகொடுத்து முழுநேர அரசியல்வாதியாக்கியவரும் கலைஞரே.
1972இல் எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பிக்க காரணமாக இருந்தவரும் அதே கலஞர் தான்.
எம்ஜிஆர் இறந்தபின் அவருக்கு பொருத்தமான நேர்த்தியான சமாதி கட்டியவரும் கலைஞர்.
தான் ஆட்சியில் அதிகாரத்தில் இருந்தும் எம்ஜிஆர் பெயரில் மருத்துவ பல்கலைக்கழகம் அமைய அனுமதித்தவரும் அதே கலைஞர் தான்.
சென்னை தரமணி திரைப்பட நகருக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டியவரும் கலைஞரே.
அந்த எம்ஜிஆர் உருவாக்கிய அடிமைகும்பல் இதுநாள்வரை எம்ஜிஆரின் பேர் சொல்லும்படி எதையுமே உருவாக்காததால் கலைஞர் பார்த்துப்பார்த்து கட்டிய ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையமாக விளங்கிய சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு இரவோடிரவாக எம்ஜிஆர் பெயர்சூட்டியிருக்கிறார்கள்.
இந்த எடுபிடிகளை சொல்லி பயனில்லை. அந்த எம்ஜிஆரே தன் ஆட்சிக்காலத்தில் கலைஞர் பெயர்பலகைகளை அகற்றிய அசிங்க அசூயை பிடித்த அரசியல்வாதி தான்.

அவருடைய ஜோடி நடிகை அம்மு அதற்கும் ஒருபடிமேலே போய் கலைஞர் எழுப்பிய கன்யாகுமரி திருவள்ளுவர் சிலையை பராமரிக்காமல் பாழாக்க முயன்றது முதல் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அப்புறப்படுத்தப்பார்த்தது, தலைமைசெயலகத்தை மருத்துவமனையாக்கியது என குரங்கின் கை பூமாலையாக கலஞரின் ஒவ்வொரு சாதனையையும் சிதைப்பதிலேயே முழுநேரமும் மூர்க்கமாய் இருந்து மறைந்தது.
அது விட்டுவிட்டுப்போன மூடர்கூடம் அதே பாணியில் கலைஞர் கட்டிய பேருந்து நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயரை சூட்டி சிரிக்குதுகள்.
எம்ஜிஆரின் கலையுலக, அரசியல் வாழ்வின் ஒவ்வொருகட்ட முன்னேற்றமும் கலைஞரின் கைதூக்கலிலேயே இருந்தது என்பதே வரலாறு.
இறுதியில் அவர் கட்டிய பேருந்து நிலையம் தான் எம்ஜிஆர் பெயர் தாங்கி அவருடைய நினைவையும் பரப்பப்போகிறது — கலைஞர் என்கிற என்றும் எரியும் சூரியனின் கடன்வாங்கிய ஒளியில் தான் எம் ஜி ராமச் "சந்திரனே" இத்தனை நாள் ஒளிர்ந்தது, இனி ஒளிரவும் முடியும் என்பதற்கான சாட்சியமாக.
செத்தும் கொடுத்த சீதக்காதியைப்போல கலைஞர் செய்துவிட்டுப்போன சாதனைகளைத்தான் உங்களால் ஒவ்வொன்றாய் திருடமுடிகிறதே தவிர சொந்தமாய் ஏதேனும் செய்திருக்கிறீர்களா கொள்ளைகும்பலே?

கருத்துகள் இல்லை: