tamil.oneindia.com - hemavandhana : சென்னை:
"புழுக்கமா இருந்தது... கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினோம்..
விடிகாலை 3 மணிக்கு அழுத குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்கினேன்... காலைல பார்த்தா என் குழந்தையை காணோம்... எப்படியாவது கண்டுபிடிச்சு குடுத்துடுங்க சார்.. ப்ளீஸ்" என்று கண்ணீருடன் போலீசில் கதறினார் இளம் தாய்.
சென்னை வேளச்சேரி பகுதியில் வசித்து வரும் தம்பதி வெங்கண்ணா - உமா. இவர்களுக்கு 2 மாதத்திற்கு முன்புதான் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சார்விக் என்று பெயரிட்டார்கள் போலீசில் புகார் இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் புழுக்கம் அதிகமாக இருந்ததால், கதவை திறந்துவைத்து தூங்கி கொண்டிருந்தபோது குழந்தையை யாரோ தூக்கி சென்று விட்டதாக பெற்றோர் போலீசில் புகார் சொன்னார்கள். இதையடுத்து வேளச்சேரி போலீசார் துரிதமாக விசாரணையில் இறங்கினர். 2 மாத குழந்தையை காணோம் என்று நேற்றெல்லாம் வேளச்சேரி பகுதியில் ஒரே பரபரப்பாக இருந்தது.
போலீசார்
முதல்கட்டமாக, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்தனர். அப்போது
நடுராத்திரி 2 மணி அளவில் நைட்டி போட்ட ஒரு பெண் குழந்தையை தூக்கி கொண்டு
தனியாக போய் கொண்டிருந்தது தெரிந்தது. அந்த பெண் யாராக இருக்கும் என்று
போலீசார் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தனர்.
கிடுக்கிப்பிடி
விசாரணையும் தொடங்கியது. அப்போது பெத்த குழந்தையை கொன்றது தான்தான் என உமா
ஒப்புக் கொண்டார். இதையடுத்து உமா கைது செய்யப்பட்டு விசாரணையும்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தையை கொன்றதற்கு உமா சொன்ன காரணம்,
"குழந்தைக்கு பால் கொடுக்கும்போது மார்பகத்தில் அதிக வலி ஏற்பட்டதாம்.
அதனால்தான் குழந்தையை கொன்றாராம்".<
விடிகாலை 3 மணிக்கு அழுத குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்கினேன்... காலைல பார்த்தா என் குழந்தையை காணோம்... எப்படியாவது கண்டுபிடிச்சு குடுத்துடுங்க சார்.. ப்ளீஸ்" என்று கண்ணீருடன் போலீசில் கதறினார் இளம் தாய்.
சென்னை வேளச்சேரி பகுதியில் வசித்து வரும் தம்பதி வெங்கண்ணா - உமா. இவர்களுக்கு 2 மாதத்திற்கு முன்புதான் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சார்விக் என்று பெயரிட்டார்கள் போலீசில் புகார் இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் புழுக்கம் அதிகமாக இருந்ததால், கதவை திறந்துவைத்து தூங்கி கொண்டிருந்தபோது குழந்தையை யாரோ தூக்கி சென்று விட்டதாக பெற்றோர் போலீசில் புகார் சொன்னார்கள். இதையடுத்து வேளச்சேரி போலீசார் துரிதமாக விசாரணையில் இறங்கினர். 2 மாத குழந்தையை காணோம் என்று நேற்றெல்லாம் வேளச்சேரி பகுதியில் ஒரே பரபரப்பாக இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக