ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ம் தேதி
தூத்துக்குடியில் நடந்த பேரணியின்போது வன்முறை ஏற்பட்டது. போலீஸ்
துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர்.
Tamil.thehindu.com : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் மே 22-ம் தேதி கலவரமாக மாறியது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக, தூத்துக்குடியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் 173
வழக்கு கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதன் விசார ணையை சிபிசிஐடி வசம்
தமிழக அரசு ஒப்படைத்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அர்ச்சுணன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி, கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி உத்தரவிட்டது. இவ்வழக்கு தொடர்பான கோப்புகளை சிபிசிஐடி போலீஸார் நேற்று முன்தினம் (6ம் தேதி) சிபிஐயிடம் ஒப்படைத்தனர்.
துணை தாசில்தார் புகார்
இந்நிலையில், தூத்துக்குடி சிறப்பு மண்டல துணை தாசில்தார் சேகர் கொடுத்த புகாரின் பேரில், தூத்துக்குடி மற்றும் வெளிமாவட்டங் களைச் சேர்ந்த 20 அமைப்புகள் மீது, சிபிஐ நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக