செவ்வாய், 2 அக்டோபர், 2018

டெல்லி விவசாயிகள் பேரணியில் போலீஸ் துப்பாக்கி சூடு .. தடியடி .. தாக்குதல் ..


tamil.oneindia.com - shyamsundar : டெல்லி: டெல்லியில் பேரணி நடத்துவதற்காக நுழைந்த விவசாயிகளை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மோசமாக தாக்கி இருக்கிறார்கள்.
பாஜக அரசுக்கு எதிராக மும்பையில் விவசாயிகள் வரலாறு காணாத பேரணி நடத்தினார்கள்.
அதை தொடர்ந்து தற்போது மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்த இருக்கிறார்கள்.
இந்த பேரணி இன்று டெல்லிக்குள் நுழையும் போது, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அவர்கள் மீது மோசமாக தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இதன் வீடியோ வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்த பேரணியில் 5000க்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டனர். கடந்த செப்டம்பர் 23ம் தேதி இந்த பேரணி தொடங்கியது. உத்தரகாண்டின் ஹரித்வாரில் தொடங்கிய இந்த பேரணி நடைபயணமாக டெல்லியில் சென்று முடிவடையும். டெல்லியில் உள்ள கிசான் காட் என்ற பகுதியில் இந்த பேரணி முடிவடையும். அமைதி பேரணி ஒரு வாரமாக நடக்கும் இந்த பேரணி இன்று காலை வரை மிகவும் அமைதியாகவே நடந்தது.

ஆனால் இன்று காலை விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முற்பட்ட போது, மத்திய ரிசர்வ் போலீஸ் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது. தண்ணீர் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி உள்ளது.

என்ன காரணம் விவசாயிகளை டெல்லிக்குள் அனுமதிக்காததற்கு போலீஸ் விசித்திரமான காரணம் சொல்லி உள்ளது.
அதன்படி விவசாயிகள் டிராக்டரில் வந்துள்ளனர். இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். பேரணி செய்பவர்கள் உள்ளே வந்தால் அசாதாரண சூழ்நிலை உருவாகும் என்று அனுமதி அளிக்க மறுத்து இருக்கிறார்கள்.
அது மட்டுமில்லாமல் போலீசார் விவசாயிகள் மீது மோசமாக தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். பல விவசாயிகள் லத்திகளால் தாக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதில் பலர் கடந்த இரண்டு நாட்களாக சாப்பிடாமல், நடைபயணமாக வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கருத்துகள் இல்லை: