புதன், 3 அக்டோபர், 2018

ம.பி. ராஜஸ்தான் மாநில தேர்தல்களில் மாயாவதி காங்கிரஸ் கூட்டணி இல்லை. .. மத்தியில் கூட்டணி தொடரும் ?

Bahujan Samaj Party Chief Mayawati announced to go solo in the upcoming Rajasthan and Madhya Pradesh state polls this year. However, maintained suspense over an alliance for the 2019 Lok Sabha polls, with Congress
யூ-டர்ன் அடித்த  பிஎஸ்பி தலைவர் மாயாவதி - காங்கிரசுடன் கூட்டணி இல்லை
zeenews tamil :இன்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி,
"மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டோம். தனியாக போட்டியிடுவோம் என அறிவித்துள்ளார். எங்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என ராகுல் மற்றும் சோனியா காந்தி விருப்பம் தெரிவித்துள்னர். ஆனால் காங்கிரஸ் கட்சியின் சில மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங் போன்றோர் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணியை விரும்பவில்லை. அவர்கள் அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்பை பார்த்து பயப்படுகின்றனர்.
பாஜகவின் ஏஜென்ட்டாக செயல்படும் திக்விஜய் சிங், மத்திய அரசிடமிருந்து மாயாவதிக்கு தொடர்ந்து அதிக நெருக்கடி வந்தவண்ணம் உள்ளது. இதனால் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி தேவை இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் இது ஆதாரமற்றது.


மேலும் பாஜக-வை தனியாக தேர்தலில் தோற்கடிக்க முடியும் என்ற தவறான மனநிலையில் காங்கிரஸ் உள்ளது. இது அவர்களின் ஆணவத்தை காட்டுகிறது. காங்கிரஸ் செய்த ஊழல்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை என்பதை காங்கிரஸ் கட்சி நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சி தங்களை திருத்திக்கொள்ளத் தயாராக இருப்பதாக தெரியவில்லை.
எனவே மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டோம். தனித்து போட்டியிடுவோம். பாஜகவை வீழ்த்துவதே எங்கள் நோக்கம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.

முன்னதாக, பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. மேலும் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் வர உள்ளது. இதை கவனித்தில் கொண்டு பாஜக-வை வீழ்த்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்திருந்தார் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி. அதைக்கான நடவடிக்கை மேற்கொண்டு வந்தார்.  எங்களுக்கு மரியாதைக்குரிய எண்ணிக்கையிலான இடங்கள் கிடைத்தால் கூட்டணி நிச்சியம் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: