மின்னம்பலம்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தனது சொந்தத் தொகுதியான நெல்லித்தோப்பில் இன்று (அக்டோபர் 1) தூய்மைப் பணியை மேற்கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தூய்மையே சேவை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டம் புதுச்சேரி மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி தனது தொகுதியான கொசப்பாளையம் - மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், அத்திட்டத்தை தொடங்கிவைத்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, துப்புரவுப் பணிகளை மேற்கொண்டார்.
இந்நிலையில், இன்று (அக்டோபர் 2) காலை நெல்லித்தோப்பு பகுதிக்குச் சென்ற நாராயணசாமி அங்குள்ள சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டார். ஒரு கட்டத்தில், சாக்கடைக்குள்ளே இறங்கிய அவர், அதனைத் தூர்வாரி சுத்தம் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதிவரை அங்கு ‘தூய்மையே சேவை’ பணிகள் நடைபெறவுள்ளன.
தூய்மையே சேவை திட்டத்தை முன்னிட்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் ராஜ்நிவாஸில் இன்று மாலை சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக