வெள்ளி, 5 அக்டோபர், 2018

ஸ்டாலின் திருமுருகன் காந்தி சந்திப்பு .. என்ன பேசினார்கள்?

Bilal Aliyar : திருமுருகன் காந்தி அவர்களின் மீதான அனைத்து
வழக்குகளுக்கும் பிணை பெறுவதற்காகவும், UAPA வழக்கினை உடைப்பதற்காகவும் உறுதுணையாக இருந்த சீனியர் கவுன்சில் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன் அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது//.
இந்த என். ஆர். இளங்கோவன் வேறு யாருமில்லை 2014 நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வழக்கறிஞர்.!! கடந்த வருடம் திருமுருகன் காந்தி கூண்டா சட்டத்தில் கைது செய்யப்பட்டபோது பிணையில் எடுத்தவரும் இவரே.. தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்காக சட்டமன்ற தேர்தல் வழக்கில் வாதாடியவரும் இவரே தான்..
ஆக, திமுகவினர் மற்றும் திமுக அனுதாபிகள் கட்சியின் நிலைப்பாட்டையும், கள எதார்த்தையும் புரிந்துகொண்டு பாசிச பாஜகவையும் அடிமை அதிமுகவையும் மட்டுமே துவம்சம் செய்வது நமக்கு, நம்முடைய கழகத்திற்கு மற்றும், கழகத்தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் பெருமை..
இன்று திமுக தலைவர் திருமுருகன் காந்தி அவர்களை சந்திக்கும்போது “உங்களோட அறிக்கையை படிச்சேண்ணே, நீங்க மட்டும் தான் சாஸ்த்ரா பல்கலைக்கழக நில அபகரிப்ப கண்டிச்சு அறிக்கை விட்டிருந்தீங்க..
இந்த ஆர்எஸ்எஸ் கும்பல் அவங்களுக்கு ரொம்ப சப்போர்ட் பன்றாங்க, யாரும் அத பத்தி பேசல, உங்களால தான் முடியும், நீங்க தான் நிலத்த மீட்க அழுத்தம் கொடுக்கனும்“னு திருமுருகன் காந்தி கேட்டிருக்கிறார்..

இருவரும் அமர்ந்து பலவற்றை பேசியிருக்கிறார்கள்.. பிறகு, எந்த உதவியானாலும் தாராளமாக தயங்காமல் கேளுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பியிருக்கிறார் திமுக தலைவர்..’

டான் அசோக் திருமுருகன் காந்தி. உங்களை உள்ள தள்ளுனது மியூசிக்கல் சேர்ல தலைவனான கோஷ்டி. உங்களை ஆஸ்பத்திரில வந்து பார்த்தது மிசால தலைவரான கோஷ்டி. வாக்கரசியல்னா உலகம் ஃபுல்லாவே கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும். ஆனா என்னைக்குமே, எப்பவுமே, எங்கயுமே ரெண்டு சைடும் ஒன்னு கிடையாது திருமுருகன். அதுனாலதான் எல்லா தேர்தல்லயும் பெரியார் யாரையாச்சும் எதிர்த்தும், யாரையாச்சும் ஆதரிச்சும் வேலை பார்த்திருக்காரு. இந்த லாஜிக் தெரியாம புலிகள் தேர்தலை புறக்கணிச்சதாலதான் ரணில் ஜெயிக்க வேண்டிய தேர்தல்ல ராஜபக்சே ஜெயிச்சு ஆட்சிக்கு வந்தான். அப்புறம் என்ன ஆச்சு என்பது வரலாறு!! அதை தமிழகத்துலயும் நடக்க விடலாமா?

எல்லா ஆட்சி முறையும் முயன்று பார்த்து தோத்துட்டுதான் மனுசன் கடைசியா ஜனநாயகத்தை, வாக்கரசியல் ஆட்சி முறையை தேர்ந்தெடுத்திருக்கான்.
இனிமேலாவது இளைஞர்கள்கிட்ட ஓட்டு போடாதீங்கனு பிரச்சாரம் பண்ணாம நிஜமான பெரியாரியத்தை பிரச்சாரம் பண்ணுங்க. மனசாட்சினு ஒன்னு இருந்தா இனிமேலும் அண்ணாவ பத்தி, திமுகவ பத்தி அவதூறு, தடுப்பூசி எதிர்ப்பெல்லாம் பண்ணிட்டு இருக்காதீங்க. மனசாட்சி இருக்கு என நம்புறோம். ஆல் தி பெஸ்ட்

கருத்துகள் இல்லை: