மாலைமலர் :தமிழகத்தில் திருப்பரங்குன்றம்,
திருவாரூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான தேதி இப்போது
அறிவிக்க இயலாது என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
#ElectionCommission #OmPrakashRawat
புதுடெல்லி:
தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் தொகுதியான திருவாரூர் உள்ளிட்ட 2
தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் அதிமுக அரசும், திமுக,
டிடிவி தினகரனின் அ.ம.மு.க மற்றும் மு.க. அழகிரி உள்ளிட்ட பலரும் தங்களது
அரசியல் பலத்தை சோதிப்பதற்காக இந்த இடைத்தேர்தல்களை எதிர்நோக்கி
காத்திருந்தனர்.
இந்நிலையில், இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்களை
சந்தித்தார். அப்போது, ராஜஸ்தான் உள்ளிட்ட5 மாநிலங்களுக்கு சட்டசபை
தேர்தலுக்கான தேதியை அறிவித்தார்.
தொடர்ந்து தமிழகத்தின் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால், மழைக்காரணமாக தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் வேண்டாம் என தமிழக தேர்தல் ஆணையர் கடிதம் எழுதியதாகவும், அவரது கோரிக்கையை ஏற்று இடைத்தேர்தலுக்கான தேதியை இப்போது அறிவிக்க இயலாது எனவும் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக