ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

நிர்மலா சீதாராமன் ரபேல் பற்றி வள வள கொழ கொழ ஆணவம் தெனாவெட்டு திமிர் ..பொய் புரட்டு பேட்டி!


ஆலஞ்சியார் : இந்தியா உலகில் நான்காவது மிகப்பெரிய ராணுவம் என்று பேசப்பட்டு வருகிற நிலையில் நேற்றைய தினம் ஆலந்தூரில்
செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன பேசுகிறார் என்று யாருக்குமே புரியவில்லை... கோபம் தவிர அவரது பேச்சில் எதுவுமே புரியவில்லை
அது மட்டுமல்லாமல் இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்ட எந்த துப்பாக்கிகளுக்கும் தோட்டாக்கள் இல்லையாம். ராணுவ டேங்கர்களுக்கு பயன்படுத்த குண்டுகள் இல்லையாம்.‌
ஹெலிக்காப்டர் உள்ளது. ஆனால் பயன்படுத்த குண்டுகள் இல்லை என்று வெளிப்படையாகவே பேசிக்கொண்டு இருக்கிறார்.‌.. தளவாடங்கள் பற்றாக்குறை என்ற செய்தி முன்பே கசிந்ததென்றாலும் அதை பகிரங்கமாக ராணுவ அமைச்சரே வெளியிடுவது நமது பலவீனத்தை காட்டும் என்ற பொது அறிவுகூட இல்லை.. சர்வசாதரணமாக ஊறுகாய் இல்லையென்பதைப் போல பேசுகிறார் காங்கிரஸ் கட்சி தான் இது போன்ற குறைபாடுகளுக்கு காரணம் என்று கூறுகிற நிர்மலா சீதாராமன் காங்கிரஸ் கட்சியை குறை கூறவேண்டும் என்ற நோக்கில் தேசத்தை காட்டி தருகின்ற தேசபக்தி தேவைதானா ? என்று சமூக வலைத்தளங்களில் குரல் எழுகிறது...

..
HAL ஊழியர்கள் அதிகாரிகள் நிர்மலா மீது கோவத்தில் இருப்பதாக செய்திகள் வெளியிட்டிருக்கிறது (Free press )
..
..Engineers and other staff of the Hindustan Aeronautics Limited are upset over Defence Minister Nirmala Sitharaman rubbishing the capability of her own ministry’s public sector undertaking in trying to justify the Modi government in the Rafale aircraft deal.
..
மற்றொரு பேட்டியில்
ராகுலும் பிரான்ஸ் முன்னாள் அதிபரும் ரபேல் ஊழலை பெரிதாக்குவதாக அதை வைத்து அரசியல் செய்வதாக சொல்கிறார்.. ஏற்கனவே திவாலான ஒரு கம்பெனியை ₹9000 கோடி கடன் வைத்திருந்ததை வாங்கிய அனில் அம்பானி.. வெறும் ₹5 லட்சம் முதலீடு செய்து ₹30,000 கோடி ரூபாய் அரசு ஒப்பந்தத்தை பெற முடிகிறதே அது எப்படி என்ற கேள்விக்கு பதில்தராமல் ..பிரதமரின் நண்பராக இருந்தால் 5லட்ச முதலீட்டில் 30,000 கோடிக்கு முன் அனுபவமில்லாமல் எதையும் செய்யமுடியும் வசமாக மாட்டிக்கொண்டது நிர்மலா சீதாராமன் பேச்சில் தெரிகிறது ..
எந்த அனுபவமும் இல்லாமல் அரசின் உயர்பதவிக்கு வர முடிந்த அவரால் இதிலிருந்து உருவ முடியவில்லை .. தெளிவற்ற குழப்பத்தில் இருப்பதை அவரின் பேச்சு காட்டிக்கொடுக்கிறது ..
..
பாஜகவின் ஊழல் உலகறிய செய்ததில் ராகுல் வெற்றிப்பெற்றிருக்கிறார் ..மோடி என்ற மாயை கலைந்துபோனது ..
..

கருத்துகள் இல்லை: