சனி, 6 அக்டோபர், 2018

யாழ்ப்பாண உலகப்படவிழா .. demons in paradise படம் திரையிடப்படவில்லை ...சிலர் எதிர்ப்பு

demons2
thinakaran.lk : யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா (Jaffna International Cinema Festival) தொடர்ச்சியாக 4 ஆவது வருடமாக எதிர்வரும் ஒக்டோபர் 03 ஆம் திகதி தொடக்கம் 8ஆ ம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இது பக்கசார்பற்ற, சினிமாத்துறை சார்ந்த படைப்பாளிகளின் ஆக்க வெளிப்பாடுகளுக்கான ஒரு களமாகும்.
இது Agenda 14 மற்றும் சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடாத்தப்படுகிறது. இவ்விழாவில் கல்வித்துறை இணைப்பாளராக யாழ். பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை பங்களிக்கிறது.
சுயாதீன திரைப்படக் கலையை யாழ்ப்பாணத்தில் கொண்டாடுவதுடன், முப்பது வருட யுத்த இழப்புக ளிலிருந்து மீளெழும் ஒரு முயற்சியாகவும் இது முன்னெடுக்கப்படுகிறது.
இத்திரைப் பட விழாவில் 30 நாடுகளைச் சேர்ந்த 80 திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இவற்றுள் முழுநீள, விவரண, குறுந்திரைப்படங்கள் ஆகியன உள்ளடங்கும். விழாவில் - ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பெல்ஜியம், பூட்டான், பிரேசில், கனடா, குறோஷியா, கொலம்பியா, செக். குடியரசு, எகிப்து, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, ஜப்பான், கர்க்கிஸ்தான், கஸக்கிஸ்தான், மங்கோலியா, நேபாளம், போலந்து, பாகிஸ்தான், சிங்கப்பூர், சுலோவோக்கியா, இலங்கை, சுவிஸ்லாந்து, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, வியட்நாம் ஆகிய நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

இவ்வருட Jaffna ICF நிகழ்வு ஒக்டோபர் 3ஆம் திகதி யாழ்ப்பாணம் கார்கில்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ள மெஜஸ்டிக் திரையரங்கில் மாலை 5.45 மணிக்கு ஆரம்பித்து, விருதுகள் வழங்கும் நிகழ்வு அதே திரையரங்கில் ஒக்டோபர் 8 ஆம் திகதி மாலை 6.15 மணிக்கு இடம்பெறும்.
விழாவின் ஆரம்பத் திரைப்படமாக, ‘த யங் கார்ல் மார்க்ஸ்’ (இயக்குனர் ஜேர்மனியைச் சேர்ந்த ரவூல் பெக்), முடிவு நாள் திரைப்படமாக ‘சுவீற் கன்றி’ (இயக்குனர் அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த ‘வாரிக் தோன்ரன்’) ஆகியன திரையிடப்படுகின்றன.
மூத்த தலைமுறைக் கலைஞர்களைப் பாராட்டி கெளரவிக்கவும், இளம் தலைமுறை திரைப்படக் கலைஞர்களை ஊக்குவிக்கவும் இவ்விழாவில் - வாழ்நாள் சாதனையாளர், சிறந்த முழுநீள அறிமுகத் திரைப்படம், மிகச் சிறந்த சர்வதேச குறுந்திரைப்படம், சிறந்த இலங்கை குறுந்திரைப்படம், மிகச் சிறந்த ஜனரஞ்சகத் திரைப்படத்துக்கான பார்வையாளர் விருது என 05 விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இவ்வருட விழாவில் Saffaa Elaisy Haggag (எகிப்து), ஊர்வசி அச்சனா (இந்தியா) மற்றும் முரளிதரன் மௌரன் (இலங்கை) ஆகியோர் அறிமுக திரைப்படங்களுக்கான நடுவர்களாக இருப்பர். Carla Maria Losch (ஜெர்மனி), Aunohita Mojumdar (இந்தியா), டொக்டர் ஜெயசங்கர் (இலங்கை) ஆகியோர் குறுந்திரைப்படங்களுக்கான நடுவர்களாகப் பங்காற்றுவர்.
மலையாள இயக்குனர் சஜி நாராயண் கருண் படைப்புக்களை நினைவு கூரவிருக்கிறது. அவரின் Andrzej Wajda, Krzysztof Kieslowski, Roman Polanski , Andrzej Munkand Jerzy Kawalerowicz ஆகியோரின் புத்தாக்கம் செய்யப்பட்ட மூன்று திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன.
இலங்கைத் திரைப்படப் பிரிவு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விவரணப்படத் தொகுதி ஒன்றை இரண்டாவதுமுறையும் இந்த விழாவில் வழங்கவிருக்கிறது.
சிறப்புத் திரைப்படங்களாக தீபா மேத்தாவின் ‘வன்செயலின் கட்டமைப்பு’ (The Anatomy of Violence), லூயிஸ் ஒஸ்மண்ட்டின் ‘Versus: The Life and Films of Ken Loach’, பிராட் ஓல்கூட் மற்றும கிரஹாம் ரௌன்சிலியின் ‘Landfill Harmonic’ ஆகியன காண்பிக்கப்படவிருக்கின்றன.
விவரணத்திரைப்படங்கள் குறித்த பயிற்சிப்பட்டறையொன்றை நடாத்த இருப்பதுடன் ‘திரைப்படங்களுக்கான பொதுமக்கள் நிதி திரட்டல்’ சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்றிலும் கலந்துகொள்ளவிருக்கிறார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவரும் காண்பியக் கலைஞருமான கலாநிதி ரி. சனாதனன் ‘வெள்ளித்திரை 70 - 80களின் யாழ்ப்பாண சினிமாக்களுடனான ஒரு பயணம்’ குறித்த தொகுப்புரையை வழங்கவுள்ளார்.
இலங்கைத் திரைப்பட ஓளிப்பதிவுக் கலைஞர் வைரமுத்து வாமதேவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி, அவரின் சினிமாத்துறைப் பங்களிப்புக்கு யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா மரியாதை செய்யவிருக்கிறது.
சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனம் தொடர்ந்தும் இரண்டாவது தடவையாகச் சிறந்த குறுந்திரைப்படத்திற்கான விருதினையும், பணப்பரிசு ரூபா ஒரு இலட்சத்தையும் வழங்கவிருக்கின்றது.
இவ்விழாவின் பிரதான அரங்குகளாக மஜெஸ்டிக் கொம்பிளெக்ஸ், -கார்கில்ஸ் சதுக்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கம் மற்றும் யாழ். நூலகக் கேட்போர் கூடம் ஆகியன அமையவுள்ளன. தொடர்புடைய ஏனைய நிகழ்வுகள் பிரித்தானிய கவுன்ஸிலிலும், அமெரிக்கன் கோர்னரிலும் இடம்பெறும்.
விழாவினை நடாத்த உதவும் ஏனைய பங்காளிகளாக - அரசாங்கத் திரைப்படப் பிரிவு, திண்ணை ஹோட்டல்ஸ், ஆண்ட்ரூ டிரவல்ஸ் கொம்பனி, யாழ். ஊடக அமையம், சூரியன் எவ். எம்., கோதே இன்ஸ்ரியூட், கிரைசலீஸ் மற்றும் ஜி.ஐ. சட் ஆகியவை அமைகின்றன.
thenee.com- ஜீவா.: இலங்கை தமிழ் சமூகம் குறிப்பாக யாழ்பாண சமூகத்தின் விழுமியங்கள் ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி’ அதுவும் தேய்ந்து சூனியமாகியிருக்கிறது.
ஒருவருடைய கருத்தை என்ன? அபிப்பிராயத்தைக் கூட செவிமடுக்கமுடியாத முண்டங்களாகிவிட்டது. அப்படியிருந்தும் மாற்று வழிகளில் ஏதாவது ஒரு விடயம் முகிழ்புப் பெறுமாயின் அதனை கருக்கிவிடுவதில் தமிழ் சமூகத்துக்கு ஈடு இணை எதுவும் இல்லை. இவ்வாறான வன்முறையான செயற்பாடுகளை கண்டுகொள்ளாமல் விடுவதுமட்டுமல்ல இருட்டடிப்புச் செய்து கருக்கிவிடும் – வக்காலத்து வாங்கும் யாழ்பாணிய ஊடகங்களின் பத்திரிகா தர்மத்துக்கு எவ்வளவு கொடுத்தாலும் தகும்.

மேலும் தமிழ் தேசியப் பால் குடிக்கும் மாற்று, முற்போக்கு சிந்தனையாளர்கள் என்று பறைசாற்றும் ஜாம்பவான்கள் இதற்கெல்லாம் பொங்கி எழுமாட்டார்கள். அதேவேளை இனவாத இலங்கை அரசாங்கம் இதே செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தால் எப்படி பொங்கியிருப்பார்கள்?
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் யூட் ரட்ணம் இயக்கிய டீமன்ஸ் இன் பரடைஸ் திரையிடப்படும் என அறிவித்தல்கள் வெளியாகிய நிலையில் சமூகத்தின் அழுத்தம் காரணமாக இத் திரைப்படம் திரையிடப்பட மாட்டாது என இத் திரைப்பட விழாவுக்கு பொறுப்பாக இருப்பவரிடம் இருந்து அறிவித்தல் வெளியாகிறிருக்கிறது.
தங்களை ‘சமூகம்’ என்று அடையாளப்படுத்திய ஒரு கும்பலின் அழுத்தம் காரணமாக “சொர்க்கத்தில் சாத்தான்கள்” திரைப்படம் திரையிடப்படமாட்டாது என அதற்கு பொறுப்பான அதுவும் தென்னிலங்கை சார்ந்த சகோதரர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சமூகம் என்பது கடல், சமுத்திரம். ஆழமும் பரந்து விரிந்த பார்வையும் உள்ளது. அதற்குள் ஆயிரமாயிரம் கருத்துக்களையும் அர்த்தங்களையும் என்றுமே சலனமற்ற தன்மையையும் காணலாம். அது உணர்சிகளின்றி உணர்வுகளால் ஆனது. அதன் பெறுமதி தெரியாத சில சருகுகள் இணைந்து இத் திரைப்படத்தை திரையிடாது தடுத்தது காலத்தின் கேவலம். அதற்கு யாழ்பாணிய பத்தரிகைகள் சான்று.
கருத்தை கருதுக்களால் மோத தகுதியற்ற சமூகம் குறைந்த பட்சம் கருத்தை அபிப்பிராயங்களால் கூட மோத தகுதியற்ற சமூகம் வன்முறை சார்ந்த, வன்முறையான சமூகமாகவே என்னென்றும் நிலைக்கும்.
இது வெளிப்படையாகவே தெரிந்த ஒன்றுதான். முள்ளிவாய்காலில் சாகடிக்கப்பட்ட  புலித்தலைவரை காலத்துக்கும் காவித்திரிவதுதான் தமிழ் சமூகத்துக்குக் கிடைத்த சாபக்கேடு.
காலத்துக்குக் காலம் சாத்தானை காவித்திரியும் சாபக்கேடுளை முகம் கொடுக்க முடியாத முண்டமாவும் பிண்டமாகவும் சீரழிந்த வாழ்கையில் உளலும் மனங்களோடு மனங்களாக!
நமது காலாசாரம், நமது தேசம் இவை காட்டுகின்ற விசயங்கள் மட்டுமே சரியானவையாக இருக்கும் என நினைப்பது தவறு. அப்படி இருக்கும் போது தனிமனித வழிபாட்டில் சுய இன்பம் காணும் சமூக விழுமியங்களில் ஒரு சிறு புல்லையேனும் வளர்க்க முடியாது.

thenee.com

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

What is that community? Jaffna tamils or fools?

Thayalini சொன்னது…

What is that community? Jaffna tamils or fools?

பெயரில்லா சொன்னது…

தனது வீட்டில் இழவு விழவேண்டும் என்றவருக்கு பிபிசி தலைப்பாகை!
,
இப்போது சிலரின் முகநூல் விவாதப் பொருள் : யூட்ரட்ணமும் அவரது இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘ Demons in paradise’ என்பதும்தான்.

நடைபெறவிருக்கும் யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவில் இந்த ஆவணப்படமும் காட்சிப்படுத்தப்படுவதாக பட்டியல்படுத்தப்பட்டிருந்தது பின்னர் திரைப்பட்ட விழா ஒழுங்கமைப்புக் குழுவிலிருந்தவர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து குறித்த படத்தை காட்சிப்படுத்துவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது அந்தக் குழுவின் முடிவு. அதனை தீர்மானிப்பதற்கு அந்தக் குழுவிற்கு உரிமையுண்டு. பொதுவாகவே கருத்துச் சுதந்திரத்தின் காவலாளிகள் தாமே என்னும் நினைப்பில் சிலர் வாழ்வதுண்டு. அவ்வாறானவர்கள் சம்பவங்களுக்காக காத்திருப்பதுமுண்டு. அவ்வாறு சம்பவங்களுக்காக காத்திருத்தவர்கள் இதனை ஒரு ஜனநாயக மறுப்பு என்று கண்டித்துள்ளனர்.




ஜனநாயகத்தின் அளவுகோல் என்பது அவரவரது அரசியல் வாழ்வுநிலைச் சூழல் மற்றும் அவர்களது பார்வை தொடர்பானதென்று விளங்கிக் கொண்டால் இதில் விவாதிக்க ஒன்றுமிருக்காது. தமிழ்ச் சூழலில் ஜனநாயகம் என்பது இனத்துவ அரசியல் புரிதலுடன் நோக்கப்படும் ஒன்று. இது தெற்கில சிங்கள இனத்துவ நிலையில் புhந்துகொள்ளப்படுகிறது. மொத்தத்தில் இலங்கையின் ஜனநாயக அரசியல் என்பதே இனத்துவ கண்ணோட்டம் கொண்ட ஒன்றுதான். அந்த இனத்துவ அரசியலுக்கு குந்தகமாக இருக்கலாம் என்று கருதப்படும் விடயங்களை தவிர்ப்பது தொடர்பில் ஒரு முன்னெச்சரிக்கை எப்போதும் நம்மைச் சுற்றி இருக்கவே செய்கிறது. இதன் விளைவுதான் சில விடயங்களை ஜனநாயகம் என்னும் பெயரில் ஏற்றுக் கொள்வதற்கான தயார் நிலை பலரிடம் இல்லை. இதனை கண்டித்து முகநூல்களில் குறிப்பிட்டிருக்கும் நபர்களை நோக்கினால் (அனைவரும் அல்ல) பெரும்பாலானவர்கள் - அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் தொடர்பில் எதிர்மனோபாவம் கொண்டவர்கள். அவர்களைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகளை எதிர்த்து பேசுவது என்பது மட்டும்தான் ஜனநாயகம். அதனை நிராகரிப்பவர்கள் அனைவரும் ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள். இதுதான் நான் மேலே குறிப்பிட்ட ஜனநாயகம் தொடர்பான வேறுபட்ட அளவுகோல்கள்.

என்னைப் பொறுத்தவரையில் இந்தத் திரைப்படத்தை காட்சிப்படுத்துதல், காட்சிப்படுத்தாமல் விடுதல் இரண்டுமே ஜனநாயகத்திற்கு உட்பட்டதுதான். காட்சிப்படுத்த விரும்புவர்கள் அதனை செய்யலாம் அதனை தவிர்க்க விரும்புவர்கள் அதனை கைவிடலாம். ஆனால் ஒரு கேள்வியும் ஊடறுக்கவே செய்கிறது.

பெயரில்லா சொன்னது…

தே போன்று இராணுவம் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டது, மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டது என்பதை முன்னிலைப்படுத்தி ஒரு திரைப்படத்தை தெற்கில் காட்சிப்படுத்த முடியுமா? நிச்சயம் முடியாது. ஏனெனில் அங்குள்ள இனத்துவ அரசியல் வரையறை அதனை ஏற்றுக் கொள்ளாது. ஏனெனில் இது இனத்துவ அரசியல் பிரச்சினையொன்றின் விளைவு. இன்றுவரை அந்த பிரச்சினைக்கு நீடித்து நிலைக்கக் கூடியதொரு தீர்வை கண்டடைய முடியவில்லை. எனவே இதனை ஜனநாயகப் பிரச்சினையாக விளங்கிக் கொள்ளாமல் இனத்துவ அரசியல் பிரச்சினையாகவே விளங்கிக் கொள்ள வேண்டும். அப்படி விளங்கிக் கொண்டிருந்தால் இது தொடர்பில் விவாதிக்க ஒன்றும் இருந்திருக்காது.

எனக்கு இதிலுள்ள பிரச்சினை வேறு. குறித்த ஆவணப்பட இயக்குனர் அண்மையில் பி.பி.சி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

"When the war was coming to an end, I wanted the [Tamil] Tigers to lose the fight. I wanted it to end, even if my own people had to be killed," Ratnam says.

இதனை பார்த்த போது இவர் ஒரு கலைஞரா என்னும் கேள்விதான் எழுந்தது. அதன் பின்னர் இந்த நபர் தொடர்பில் பேசுவதற்கே ஒன்றுமில்லை என்பது எனது அபிப்பிராயம். இப்படியொரு கருத்தை விடுதலைப் புலிகளை பூண்டோடு அழிக்க வேண்டுமென்று எண்ணம் கொண்டிருந்த மகிந்த, கோத்தபாய ராஜபக்ச போன்றவர்களே கூறியதில்லை. பிரபாகரனின் மரணம் தங்களுக்கு மகிழ்சியை தரவில்லை என்று அண்மையில் ராஜீவ் காந்தியின் மகன் ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார். அதிகார நலன்களை பேணிப்பாதுகாக்க விரும்பும் அவர்களே அவ்வாறு கூறுகின்ற போது, ஒரு கலைஞர் எவ்வளவு மக்கள் செத்தாலும் பரவாயில்லை புலிகள் அழிய வேண்டுமென்று விரும்பினேன் என்று கூறுவது அருவருப்பான ஒன்று. எனவே இப்படியான ஒருவரது ஆக்கத்திற்கு களம் அமைத்துக் கொடுப்பதை தவிர்த்திருக்கும் விழாக் குழுவின் நடவடிக்கையில் எந்தவொரு தவறையும் இப்போது காணமுடியாமல் இருக்கிறது.

எனது சொந்த மக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை என்று கூறும் இந்த நபர் அந்த மக்களின் கொலைக்காக நீதி கோரும் அரசியலையும் ஏற்கவில்லை என்பதுதானே பொருள். இப்படிப்பட்ட ஒருவருக்காக களமிறங்குபவர்களின் நிலைப்பாடும் அதுதானா?

விடுதலைப் புலிகள் தொடர்பில் ஒருவரிடம் விமர்சனமிருக்கலாம் ஆனால் அது ஒரு ஒட்டுமொத்த சமூக பொறுப்பிலிருந்து வர வேண்டும். நமக்கு பணம் தரும் எஜமானர்களுக்காக நாம் வலிந்து விமர்சனங்களை புனையும் போது, அதனை எல்லோரும் அனுமதிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கவும் கூடாதுதானே!

ஆனால் இந்தத் தடை, ஒரு அறிமுகமில்லாத நபரையும் அவரது ஆவணப்படத்தையும் தேவையில்லாமல் பிரபலப்படுத்திவிட்டது. இதனால் அந்த நபருக்கு இலாபமே! குறித்த ஆவணப்படத்திற்காக நிதிவழங்கியவர்கள் இன்னும் அதிகமான நிதியை வழங்கக்