LR Jagadheesan : சீமான்
ரசிகர்களுக்கும் பா ரஞ்சித் ரசிகர்களுக்கும் பெரிய
வித்தியாசமில்லை. முதல்ரகம் இனவெறியை ஆதரிக்கிறார்கள். இரண்டாவது ரகம் ஜாதித்தூய்மையை வழிபடுகிறார்கள்.
இருதரப்பாரும் எந்நேரமும் அடுத்தவருக்கு மரபணுச்சோதனை நடத்தி “இவாள்ளாம் நம்மவா, அவாள்ளாம் வேத்து மனுஷா” என அக்ரஹார ரகத்தீர்ப்பெழுதுவதிலேயே ஆயுளை செலவழித்துக்கொண்டிருக்கிறார்கள்.
முரண்படுபவர்கள், விமர்சிப்பவர்கள், எதிர்ப்பவர்களை “வந்தேறிகள்” என்று வாஞ்சையோடு அழைத்தால் அது சீமான் ரசிகர்கள். “சவர்ணாக்கள், சூத்திர ஆண்டைகள்” என்றழைத்தால் அது ரஞ்சித் ரசிகர்கள்.

ஒரே வித்தியாசம் சீமானின் ரசிகர்பட்டாளத்தில் மென்பொருள் மேதைகள் அதிகம். ரஞ்சித் ரசிகர்களில் பலர் பேராசிரியப் பெருந்தகைகள்.
இந்த இருதரப்பாரும் ஓயாது பாடுபட்டு உருவாக்க விரும்பும் “உன்னத பொன்னுலகில்” இவர்களால் “அந்நியர்” எனப்படுவோருக்கு என்ன இடம் இருக்கும் என்பதை இருதரப்பாரும் மறைக்காமல் இப்போதே சொல்வது இருதரப்பாரின் தனிச்சிறப்பு.
ஆனால் இருதரப்பாருமே “வாருங்கள் உரையாடுவோம்” என்று எதிர்தரப்புக்கு அழைப்பு விட்டுக்கொண்டே இருப்பார்கள்.
“நாங்க முதலில் உங்களை செறுப்பால் அடிப்போம். அதை நீங்கள் வாங்கிக்கொண்டு தாங்கிக் கொள்ளுங்கள். முடிவில் உங்கள் தலையின்மேல் சடகோபுரம் வைப்போம்” என்கிற ஶ்ரீரங்கத்து சீமாட்டியின் வழிமுறை இவர்களுடையது.
பொதுவெளியில் அரசியல் உரையாடலுக்கென தமிழ்நாட்டில் ஒரு நெடிய பாரம்பரியம் இருக்கிறது. பெரியார், அண்ணா, கலைஞர் ஒரு நூற்றாண்டுகாலம் அதை நடைமுறைப்படுத்தியும் காட்டியிருக்கிறார்கள். முடிந்தால் அந்த மூவரின் “உரையாடல் இலக்கணத்தை” ஒரு எட்டு இதுகள் படித்துப்பார்த்த பின் வந்து அடுத்தவருக்கு வகுப்பெடுப்பது நல்லது.
செயற்கை இருட்டில் ஒளிரும் சினிமாத் திரையில் கற்பனையாக கட்டமைக்கப்பட்ட சமூக, அரசியல் வரலாற்றையே பார்த்துப்பழகிய எம்ஜிஆர் ரசிகபட்டாளத்தின் விசிலடிச்சாங்குஞ்சுகளின் version.2 விடம் இதையெல்லாம் எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகம்தான். ஆனாலும் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது..?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக