உளவுப்பிரிவு ஐ.ஜி சத்தியமூர்த்தி, பாதுகாப்பு அதிகாரிகள் வீரப்பெருமாள், பெருமாள்சாமி, சுதாகர் ஆகியோர் சிசிடிவியை நிறுத்திவைக்கச் சொன்னதனால் அப்போலோ நிர்வாகம் நிறுத்தியதாக தெரிவிப்பு
tamil.oneindia.com - kalai-mathi.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவில் சந்தேகம் இருப்பதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. அப்பல்லோ மருத்துவர்கள், செவிலியர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில்
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது தொடர்பான வீடியோ ஆதாரங்களை வெளியிடுமாறு
எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் சி.சி.டி.வி. காட்சிகள் தங்களிடம் இல்லை என்றும், முக்கிய
பிரமுகர்கள் சிகிச்சை பெறும் அறைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் வைப்பது
இல்லை என்றும் தெரிவித்தது அப்பல்லோ நிர்வாகம்.
இந்நிலையில்
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை வெளியிட்ட தினகரன் ஆதரவாளர்
வெற்றிவேலுக்கு வீடியோவை ஒப்படைக்குமாறு விசாரணை ஆணையம் உத்தரவிட்டது.
மேலும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கும் சி.சி.டி.வி. வீடியோ
பதிவுகளை ஒப்படைக்குமாறு கடிதம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில்
இதுகுறித்து அப்பல்லோ நிர்வாகம் விசாரணை கமிஷனுக்கு கடிதம் வாயிலாக கடந்த
மாதம் பதில் அளித்தது. அதில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சி.சி.டி.வி.
வீடியோ பதிவுகள் அழிந்து விட்டதாக தெரிவித்தது. இதைத்தொடர்ந்து இதுகுறித்து
பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு அப்பல்லோ மருத்துவமனைக்கு விசாரணை
கமிஷன் உத்தரவிட்டது.
இந்நிலையில்,
இதுதொடர்பான பிரமாண பத்திரத்தை மருத்துவமனை நிர்வாகம் நேற்று தாக்கல்
செய்தது. அதில், ஜெயலலிதாவை அப்போலோவில் அனுமதித்தவுடன் உளவுப்பிரிவு ஐ.ஜி
சத்தியமூர்த்தி, பாதுகாப்பு அதிகாரிகள் வீரப்பெருமாள், பெருமாள்சாமி,
சுதாகர் ஆகியோர் சிசிடிவியை நிறுத்திவைக்கச் சொன்னதாகவும், அதனால்தான்
நிறுத்திவைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
tamil.oneindia.com - kalai-mathi.
ஜெயலலிதாவுக்கு என்எஸ்ஜி பாதுகாப்பை விலக்க சொன்னது யார்?.. பரபர தகவல்கள்!-வீடியோ
சென்னை: ஜெயலலிதாவை அனுமதித்த உடன் சிசிடிவி காட்சிகளை நிறுத்த சொன்னது யார் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவில் சந்தேகம் இருப்பதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. அப்பல்லோ மருத்துவர்கள், செவிலியர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக