ஞாயிறு, 1 ஜூலை, 2018

ஜாதி வெறி நெருப்பில் வசூலை வாரி குவித்த கமலின் திரை வரலாறு !

தேவர்மகன், தசாவதாரம், நாயகன், ஹே ராம், மீண்டும் கோகிலா, பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம், சதி லீலாவதி, விருமாண்டி, நல தமயந்தி, அவ்வை சண்முகி, விஸ்வரூபம் என்று கமலின் 80% படங்கள் சாதிய என்சைக்ளோபீடியாக்கள்
Shalin Maria Lawrence : 1957ம் ஆண்டு பரமக்குடி கலவரங்களுக்கு பிறகு எண்பதுகளின் நடுவில் தமிழ்நாட்டில் ஜாதிய கலவரங்கள் மீண்டும் துவங்க ஆரம்பித்தன. பின்பு தொன்னூறுகளின் ஆரம்பத்தில் தென் மாவட்டங்களில் குறிப்பாக "திருநெல்வேலி" மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் ஜாதிய மனப்பான்மையில் ஒரு எழுச்சி காணப்பட்டது. கலவரங்களும் அதிக அளவில் வெடிக்க ஆரம்பித்தது.
அந்த நேரத்தில் தான் பரமகுடியை சேர்ந்த திருவாளர் கமல்ஹாசன் அவர்கள் ஒரு ஜாதிய படத்தை எடுத்தார். படம் முழுவதும் சாதியத்தை சாடுவது போல் சில வசனங்களை வைத்தாலும், முழுக்க முழுக்க அந்த படம் ஒரு குறிப்பிட்ட சாதியை தூக்கி பிடித்தது. போதாக்குறைக்கு அந்த சாதிக்கு ஒரு caste anthem வடிவில் பாடலும் உருவாக்கப்பட்டது. எனக்கு தெரிந்து இந்தியாவிலேயே ஒரு குறியிட்ட ஆதிக்க சாதியை போற்றி வெளியிடபட்ட ஜாதிய கீதம் அந்த படத்தில் தான் இடம் பெற்றது.

பொதுவாக சாதிய மனப்பான்மையை சாடாமல் "சாதியம் பார்க்கும் நல்லவர்கள்" மற்றும் "சாதியம் பார்க்கும் கெட்டவர்கள்", என்று இறுதிவரை ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெருமையை பிடித்து தொங்கிக் கொண்டிருந்தது அந்த படம்.
படம் ஹிட். பட்டி தொட்டி எல்லாம் அந்த படத்தின் வெற்றி படர்ந்தது, கூடவே சாதிய வன்மமும். கெடா வெட்டிலிருந்து, மஞ்சள் நீராட்டி விழா வரை அந்த பாடலே ஒலித்தது.
படத்தில் சொன்னதுபோல பிள்ளை குட்டிகளை படிக்க வைத்தார்கள் கூடவே சாதியத்தையும் ஊட்டி வளர்த்தார்கள். அவர்கள் 'படித்து' சாதிவெறியர் ஆனார்கள். அவ்வளவே
அந்த காலகட்டத்தில் அந்த படம் தேவையில்லாதது. இந்த காலகட்டத்திலும் அந்த படம் தேவையில்லாதது. எந்த காலகட்டத்திலும் அந்த படம் தேவையில்லாதது.
That movie proved to be a catalyst to the prevalent caste mentality of the oppressors.
திரு. கமல்ஹாசன் நடித்த முக்கால்வாசி படங்களில் "caste reference" அதாவது கதாபாத்திரங்களுக்கு தொடர்பான ஜாதிய குறிப்புகள் இருக்கும். "மொழி, வட்டார வழக்கு, அவர்கள் செய்யும் பணி" என்று ஜாதி அதிக அளவில் தென்படும்.
எம்ஜியார் படங்களை எடுத்து கொள்வோம். அவர் நடித்த ஒரு படத்திலும் எந்த ஒரு சாதியின் சாயலும் இருக்காது. எம்ஜியாரின் மொழி உடை இவற்றை வைத்து அவர் எந்த ஜாதி அல்லது எந்த சமூகம் என்று கணிக்கவே முடியாது. அப்படியே அவர் ஒரு சமூகத்தை பிரதிபலித்திருந்தாலும் அது ஒடுக்கப்பட்ட சமுதாயமாக மட்டுமே இருக்கும். மீனவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் நரி குறவர்கள் தான் அவர் படங்களில் தோன்றிய சமூகம். பிராமண பாஷை பேசி கூட நடித்திருக்க மாட்டார். His movies were caste neutral.
அதற்கு அப்படியே நேரெதிர் சிவாஜி கணேசன் அவர்களது படங்கள். அதே பாணியில் அதிக சாதிய சாயல்கள் கொண்டது கமல் படங்கள்தான்.
சிவாஜி தான் கமல். நடிப்பிலும் சரி மற்றவற்றிலும் சரி.
சென்னை பாஷை என்று சொல்லி உண்மையான சென்னையின் மொழியை தவறாக சித்தரித்தவர் கமல்ஹாசன். உண்மையான சென்னை மொழி வேறு. கமல் பேசுவது ஆதிக்க சமூகத்தின் "கிண்டல் பாணி" சென்னை பாஷை.
தேவர்மகன், தசாவதாரம், நாயகன், ஹே ராம், மீண்டும் கோகிலா, பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம், சதி லீலாவதி, விருமாண்டி, நல தமயந்தி, அவ்வை சண்முகி, விஸ்வரூபம் என்று கமலின் 80% படங்கள் சாதிய என்சைக்ளோபீடியாக்கள்.
"எந்த சாதி எப்படி பேசுவார்கள், எப்படி உடை அணிவார்கள், என்ன பழக்க வழக்கம் இருக்கும், என்ன பணி செய்வார்கள்", என்று ஒரு வெளிநாட்டினர் அறிய விரும்பினால், கமல் படங்களை reference ஆக தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
கமல் ஹாசன் ஒரு சாதியை சேர்ந்தவர் அல்ல.அ வர் நால் வர்ண ஜாதிகளையும் உள்வாங்கியவர்.
He did not deter the caste system. On the other hand he embrassed each and every caste identity and preserved it through his movies.
அவர் ஜாதியை ஒழிக்க முற்படவில்லை. மாறாக தன் படங்களின் மூலமாக வர்ணாஸ்ரமத்தின் நாலு ஜாதிகளையும் தன் படங்களின் மூலமாக போற்றி, பாராட்டி பத்திரப்படுத்தி இருக்கிறார். வர்ணாஸ்ரமத்தை நிலை நாட்டி இருக்கிறார்.
மறைமுகமாக இருக்கும் பள்ளிக்கூட விண்ணப்பங்களில் சாதி பெயரை போடாத திரு. கமலஹாசன் அவர்கள் கோடிப்பேர் காணக்கூடிய வெகுஜன ஊடகத்திற்கு ஜாதியை எடுத்து கொண்டு போனதுதான் அவர் தமிழர்களுக்கு செய்த மஹா புண்ணியம்.
#சபாஷ்_நாயுடு.

கருத்துகள் இல்லை: