ஞாயிறு, 1 ஜூலை, 2018

சிலை கடத்தலில் எச் ராஜாவுக்கு தொடர்பு ? இந்து அறநிலை துறையின் வசம் இருக்கும் போதே இவ்வளவு திருட்டு ..

Karuppu Neelakandan : இந்த அய்.ஜி. பொன்மாணிக்க வேல் என்கிற
பார்ப்பனரல்லாத அதிகாரி 40,50 ஆண்டுகளாக கடத்தப்பட்ட கோயில் சிலைகளையெல்லாம் தமது சிறந்த புலனாய்வின் மூலம் பெரும்பாடுபட்டு தமிழகத்திற்கு திரும்ப கொண்டுவந்து சேர்த்துக் கொண்டிருக்கிறார்.
இவர் ஒவ்வொரு முறையும் மீட்ட சிலைகளோடு செய்திகளை ஆரவாரத்தோடும் தமிழ் அல்லது இந்தியப்பெருமிதத்தோடும் வெளியிட்டு வருகின்றன மீடியாக்கள்.
ஆனால் இந்தக் கடவுளர் சிலைகளை மாற்று பித்தளை சிலைகளை அந்த இடத்தில் செய்துவைத்து விட்டு வெளிநாட்டிற்கு கடத்த உதவியது யார் என்று இதுவரை மீடியாக்கள் விவாதித்தது உண்டா?
இந்தக் கடவுள் சிலை தழுவ கழுவ அல்லது வேறெதையோவெல்லாம் செய்து பிழைப்பு நடத்துவதை பிறப்புரிமையாக வைத்திருக்கும் அந்தப் பார்ப்பன பூசாரிக்கள் குருக்கள் அர்ச்சகர்கள் துணையின்றி இந்தத் திருட்டை ஊழலைகளை கள்ளக்கடத்தலை செய்திருக்கமுடியுமா?


இந்தக் #கலாச்சாரக்கிரிமினல்க ளை பற்றி வாய்த் திறக்கவோ விவாதிக்கவோ
மறுத்துக் கொண்டு மொத்த உபதேசங்களையும் பொது மக்களுக்கே வழங்கிக்கொண்டிருக்கும் யோக்கியதைதான் என்ன?

இந்த இடத்தில் பார்ப்பனர்களைப் பற்றி
தந்தை பெரியார் தன் வாழ்வியலிலிருந்து தரும் ஒரு உதாரணத்தோடு இதை முடிக்கிறேன்.
"நண்பர்களே பார்ப்பனர்களுக்கு தேவை அதிகம் அதனால் ஊழலைத்தோற்றுவிப்பவர்களே அவர்கள்தாம். ஈரோட்டில் மனோ ரஞ்சிதம் பூமரம் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் மட்டுமே உண்டு. இதில் மாலைக்கட்டி நாங்கள் காலையில் சாமிக்கு போட்டிருந்தால் இரவில் அது தாசிக் கழுத்திலேக் கிடக்கும் அவ்வளவு ஊழல் பேர்வழிகள் பார்ப்பனர்கள் "

கருத்துகள் இல்லை: