வியாழன், 5 ஜூலை, 2018

வைரமுத்து மீண்டும் சமஸ்கிருதத்திற்கு வக்காலத்து .... பட்டது போதாதா ? கெட்டது போதாதா?

Venkat Ramanujam : உலகம் முழுவதும் சுமார் 7 கோடி பேர் பேசும் தமிழையும் .,
வெறும் 14135 பேர் (as per 2011 census) மட்டுமே உலகின் பேசும் சமஸ்கிரதமும் ஒரே தளத்தில் வைத்து இரண்டுமே இரு கண்கள் என்கிறாரே வைரமுத்து ...
தமிழ் மொத்தம் ஆறு நாடுகளில் தேசிய மொழி .. அர்எஸ்எஸ் கொண்டாடும் 43 கோடி பேசும் இந்திக்கு கூட இந்த பெருமை கிடையாது ..
2000 ஆண்டுக்கு முன்னால் எழுதிய திருகுறளுக்கு ஈடு இனையாக நான்கு வேதமும் நிச்சயம் கிடையாது ..
தமிழ் சமீபத்தில் கனடா,அஸ்திரிலியா ஆகிய நாடாளுமன்றத்தில் பேசப்பட்டு எற்கப்பட்டும் உள்ளது ..
சமீபத்தில் நடந்த #gobackmodi ஹாஷ்டாக உலகெங்கும் உள்ள தமிழர்கள் 4 லட்சம் பேர் டிவிட் செய்ய மோடி தமிழ்நாட்டில் கால் பதியாமல் ஒடியதும் சரித்திரம் ஆனாது ..
இப்படி பல பெருமைகளை கொண்ட தமிழுடன் .,இது போல எந்த பெருமையும் அற்ற .,அழிந்து கொண்டு கோமாவில் கிடக்கும் ICU சமஸ்கிரத மொழியுடன் ஒப்பிட்டு பேச ஒரு "பிம்பிளக்கடி பிளாங்கி" அதிசய அற்புத மனநிலை இருக்க தானே வேண்டும் ..

#ஆண்டாள் விஷயத்தில் எற்பட்ட காயத்திற்கு மருந்து சரியாக தடவாமல் இப்படி பிதற்றும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது .. இரு கண்கள் இருந்தும் குருடராய் ஆகி விட்டார் ..அய்யோ பாவம் ..
ஜெயகாந்தன் மறைவின் போது கவிபேரரசு வெளியிட்ட போலி கடித விவகாரத்தின் ரீல் புத்தி அவ்வப்போது எட்டி பார்க்கிறது என்றேல்லாம் இனி மெமரிஸ் ரிவைண்ட் வேற செய்வார்களே ..

கருத்துகள் இல்லை: