A.சிவக்குமார் : வேலூரில் தேர் பற்றியெரிந்தது பின்னர் அது எரிக்கப்பட்டது
என்று
கண்டுபிடித்தார்கள்
♦ திருவேலங்காட்டில் தலமரம் எரிந்தது
பின்னர் அது மனிதர்களால் எரிக்கப்பட்டது என்று கண்டுபிடித்தார்கள்
♦ மதுரையில் கோயில் வளாகமே தீடிரென எரிந்தது. சிசிடிவிக்கள் எப்படி ஜெயலலிதா மருத்துவமனைக்கு வந்த நாளன்று செயலிழந்ததோ அதே மாதிரி மீனாட்சியம்மன் கோயிலிலும் எரியூட்டுவதற்கு முன்னர் மனிதர்களால் செயலிழக்க செய்யப்பட்டிருப்பது
கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மூன்று சம்பவங்களும் மனிதர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவங்கள்
தான் என்று உறுதியானதும் அரசிடமிருந்து எவ்வித மேல் நடவடிக்கையுமில்லை.
ஆனால் சம்பவம் நடந்தவுடன் எழுந்த ஒரு கூக்குரல், கோயில்களை விட்டு அரசாங்கம் வெளியேற வேண்டும் என்று அலறியது. அதற்காக கோயில் மீட்பு இயக்கம் கூட கோலாகலமாக தொடங்கப்பட்டது. அட இது நியாயந்தானே என்று தமிழர்கள் சிலரும் பிதற்ற தொடங்கியிருந்தனர்.
இடையே இக்காட்சியில் தோன்றினார் காவல்துறை அதிகாரி பொன்.மாணிக்கவேல். சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் தீவிரமாக இயங்கியவர் சென்னையில் தீனதயாளன் என்பவரை கைது செய்தார். ஆள்வோர் பொன்.மாணிக்கத்தை பணிமாற்றம் செய்து தீனதயாளனை காப்பாற்ற முயன்றனர். நீதிமன்றம் தலையிட்டு பொன்.மாணிக்கம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் தானிருக்க வேண்டும் என்பதை உறுதி செய்தது.
எம்ஜிஆரால், கலைஞரால் முயற்சி எடுக்கப்பட்டும் குஜராத்திலிருந்து தமிழகம் வந்து சேர இயலாத இரு சிலைகள் பொன்.மாணிக்கவேல் அவர்களால் தஞ்சை வந்து சேர்ந்தது.
அந்த சிலை சென்னை வந்தடைந்த போது, மீட்க சென்ற அதிகாரிகளும், மாநில அமைச்சர்களும் பேட்டிக்கொடுத்த போது, எந்தவித அரசு பதவியோ, அவசியமாே இல்லாமல் ஒருவர் அமைச்சர்களுடன் வந்து நின்றுக்கொண்டு நிருபர்களிடையே பேச முயல...மொத்த பத்திரிக்கையாளர் கூட்டமும் அவரை புறக்கணித்தது.
பொன்.மாணிக்கவேல் மக்கள் மத்தியில் கதாநாயகனாக உயர்ந்தார். மேலும் பல சிலைகள் மீட்கப்படப் போவதாக அறிவித்தார். நியாயமாக அவரை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு பாராட்ட வேண்டிய அரசு தற்போது மீண்டும் அவரை சிலை கடத்தல் பிரிவிலிருந்து மாற்றும் உத்தரவை பிறப்பித்திருக்கிறது. குஜராத்தில் கைவைத்தால் விடுவார்களா?
மனிதர்களின் சதிச்செயலால் கோயில்களில் நடந்த தீவிபத்து சம்பவங்களின் போதெல்லாம் எகிற குதித்த அந்த நபர், இன்று கோயில் சிலைகளை மீட்பதற்காகவே பணி நியமனம் செய்யப்பட்ட பொன்.மாணிக்கவேலின் பணி மாற்றத்தை எதிர்த்தாரா என்று பார்த்தால் இல்லை என்ற பதிலே வருகிறது.
அன்னாருக்கே சிலை கடத்தலில் தொடர்பிருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன. சுமார் 7000 மூலவிக்கிரஙக்கள் எல்லாம் போலியானவை என்று சொல்லப்படுகிறது. தமிழக அரசு தனக்கு எந்த ஒத்துழைப்பும் தருவதில்லை என்று காவல்துறை அதிகாரி பொன்.மாணிக்கவேலும் நீதிமன்றத்தில் குமுறியிருக்கிறார்.
இந்துக்கோயில்களை விட்டு அரசாங்கம் வெளியேற வேண்டும் என்ற கோஷ்டியின் உண்மை முகம் இவ்வளவு சீக்கிரம் வெளிப்படும் என்று யாரும் எண்ணியிருக்கமாட்டார்கள். அக்கூட்டமும் இப்படி வெளிப்படுவோம் என்று எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்.
அவர்கள் நம்புவதாக சொல்லும் அவர்களுடைய தெய்வமே அவர்களை நம் முன் அடையாளம் காட்டியது போலும்.
~~~~~~~~~~
நான் இந்து என்று சொல்பவனை நம்பு
நான் இந்து இல்லை என்று சொல்பவனையும் நம்பு
நான் இந்து, நீயும் இந்து, நாம எல்லாமே இந்து என்று சொல்பவனை நம்பாதே...பூட்டக்கேஸ் ஆயிடுவே!!!
-A.சிவக்குமார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக