tamil.oneindia.com/authors/lakshmi-priya.: புதுவை:
யாருக்கு அதிகாரம் என்ற விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை
நான் பல முறை கூறியதுதான் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
டெல்லியில் யாருக்கு அதிகாரம் என்ற வழக்கில் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை நாராயணசாமி வரவேற்றார். இதுகுறித்து நாராயணசாமி கூறுகையில் அந்த தீர்ப்பை நான் முழுவதுமாக படிக்கவில்லை. அந்த தீர்ப்பின் முக்கிய அம்சங்களை கூறுகிறேன். இந்த தீர்ப்பு புதுச்சேரி மாநிலத்துக்கு 100-க்கு 110 சதவீதம் பொருந்தும். நான் முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் இந்த 2 ஆண்டு காலம் வரை, துணை நிலை ஆளுநர் அமைச்சர்களின் அறிவுரையின்படிதான் செயல்பட வேண்டும். அவருக்கென்று தனிப்பட்ட அதிகாரம் கிடையாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.
அது மட்டுமல்லாது. 19 முறை அவருக்கு கடிதங்கள் எழுதினேன்.
அதிகாரிகளை அழைத்து தனியாக கூட்டம் போடுவதற்கு அதிகாரம் கிடையாது என்றும் கூறியுள்ளேன். பல பகுதிகளுக்கு சென்று பார்ப்பதற்கு உரிமை உண்டு. தனியாக உத்தரவு போடுவதற்கு அதிகாரம் இல்லை என்று கூறியுள்ளேன்.
கருத்து வேறுபாடு ஏற்பட்டால் எல்லா விஷயங்களையும் டெல்லிக்கு அனுப்புவதற்கு அதிகாரம் இல்லை. முக்கியமாக கொள்கை முடிவுகளை எடுக்கும் போது கருத்து வேறுபாடு ஏற்பட்டால் டெல்லிக்கு அனுப்பலாம் என்று நான் சொல்லியிருக்கிறேன். நான் சொன்ன அனைத்தும் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் திட்டங்களுக்கு துணை நிலை ஆளுநர் முட்டுக்கட்டை போடுகிறார். அமைச்சரவை முடிவே இறுதியானது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனவே அமைச்சரவை எடுக்கும் முடிவில் தலையிட ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரம் இல்லை.
மாநில நிர்வாகத்தில் அனைத்து அதிகாரங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு உண்டு. நிதி, நிலம், நிர்வாகம் முழுவதிலும் மாநில அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக