திங்கள், 2 ஜூலை, 2018

நிதிஷ்குமார் மீண்டும் பாஜகவை வெட்டிவிட தீர்மானம்? பல்டியோ பல்டி!

பிகார்: கூட்டணியை முறிப்பதற்கா  பாஜக எம்.எல்.ஏ. மகன் கைது?மின்னம்பலம்: மதுவிலக்கு அமலில் இருக்கும்
பிகாரில் மது பாட்டில்கள் வைத்திருந்ததாகக் கூறி பாஜக எம்.எல்.ஏ. மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இது அரசியல் ரீதியாக அம்மாநிலத்தில் அதிர்வுகளை ஏற்படுத்திவருகிறது.
வரவுள்ள மக்களவைத் தேர்தலில் கூட்டணி தேவையில்லை என்றால் பாஜக தனித்துப் போட்டியிடலாம் என்று ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் பொதுச் செயலாளர் சஞ்சய் சிங் சமீபத்தில் தெரிவித்திருந்தார். மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பிகாரில் கூட்டணி ஆட்சி நடத்திவரும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக கட்சிகளுக்குள் மோதல் வலுத்துவருகிறது.

பாஜக கூட்டணியில் இருந்து விலகும் நோக்கிலே சமீபகாலமாக ஐக்கிய ஜனதாதளம் கட்சி செயல்பட்டுவரும் நிலையில் இன்று (ஜூலை 2) பாஜக எம்.எல்.ஏ. மகன் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுவிலக்கு அமலில் இருக்கும் பிகாரில், பாஜக எம்.எல்.ஏ.வான சியான் வியாஸ் தேவ் பிரசாத்தின் மகன் விகாஸ் குமார் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர் மது பாட்டில்களை வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசம் – பிகார் எல்லை அருகே மைர்வே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2016ஆம் ஆண்டு முதல்வர் நிதிஷ்குமார் பிகாரில் மதுவிலக்கை அமல்படுத்தினார். வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மதுபானங்களைச் சட்ட விரோதமாக விற்பனை செய்வோர் மற்றும் வாங்குவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
பிகாரில் கடந்த இரு ஆண்டுகளில் 1.15 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அந்த வகையில் தான் இந்தக் கைதும் என்று காவல் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும். பாஜகவை கோபப்படுத்தும் அரசியல் நோக்கத்தின் ஒரு பகுதியே இந்தக் கைது என்கிறார்கள் அம்மாநில அரசியல் நோக்கர்கள்.

கருத்துகள் இல்லை: