மின்னம்பலம்: குஜராத் ராஜ்கோட்டில், தொழிற் சாலை ஒன்றின் ஊழியர்களால் முகேஷ் வானியா என்ற தலித் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி இன்று காலை வெளியிட்ட காணொளியில், தொழிற்சாலை நுழைவாயில் ஒன்றில், இடுப்பில் கயிற்றினால் கட்டப்பட்டிருந்த தலித் ஒருவரை, 3 பேர் சேர்ந்து கொடூரமாகத் தாக்கும் சம்பவ காட்சியை பதிவேற்றியிருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலையில், முகேஷ்வானியாவையும் அவரது மனைவியும் தாக்கிய கும்பல், அவர்கள் காந்தங்களைப் பயன்படுத்தி இரும்பு பொருட்களை திருடியதாகக் குற்றம்சாட்டி, அவர்கள் மீது தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.
அருகிலுள்ள கிராமத்திற்கு உதவிக் கோரி தப்பிச் சென்ற முகேஷ்வானியாவின் மனைவி திரும்பி வந்தபோது, முகேஷ்வானியா தரையில் வீழ்ந்து கிடந்தார், உடனடியாக முகேஷ் வானியை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கச் சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, முகேஷ்வானியாவின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், சம்பவத்திற்குக் காரணமான தொழிற்சாலையின் உரிமையாளர் உட்பட 5 பேரைக் காவல் துறையினர் கைது செய்து, வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கைப் பதிவு செய்திருக்கிறது.
மேலும் ஜிக்னேஷ் மேவானியின் முகநூல் பதிவில் “முகேஷ்வானியாவுடன் அவரது மனைவியும் தாக்கப்பட்டுள்ளார், தாக்குதலில் முகேஷ்வானியா இறந்துள்ளார், இந்நிகழ்வு 2016இல் நடந்த உனா தாக்குதலைக் காட்டிலும் மோசமானது” எனப் பதிவிட்டிருந்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக