tamil.goodreturns.in -prasanna: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடவேண்டும் என்பதற்காக மக்கள் போராடி வந்த நிலையில், போராட்டம் வன்முறையாக மாறியது, அரசு சொத்துக்கள் நாசமாகியது எனத் தேவையில்லாத காரணங்களுக்குக் காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டு 12 பேரை அநியாயமாகக் கொன்று குவித்துள்ளனர்.
இதன் எதிரொலியாக ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான வேதாந்தா பங்குகள் இன்று 5 சதவீதம் வரை சரிந்தது.
மெட்டல் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் : வேதாந்தா நிறுவனத்தின் சரிவால் இந்திய பங்குச்சந்தையில் மெட்டல் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் மீதான முதலீட்டை அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் வெளியேற்றினர்.
இதன் எதிரொலியாக இன்று மும்பை பங்குச்சந்தை 1 சதவீதம் வரையில் சரிந்தது. ரத்த சிந்தும் மக்கள் : பொதுவாக வடமாநில மீடியாக்கள் தென் இந்தியாவைக் கவனிக்காமல் இருப்பது போலவே நேற்றைப் போராட்டத்தின் எதிரொலி இன்று காலையில் தான் எதிரொலித்தது.
இதன் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் மதியம் 12 மணிக்கு மேல் அன்னிய முதலீட்டாளர்களின் முதலீட்டு வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 320 புள்ளிகள் வரையில் சரிந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக