தினத்தந்தி :ரூ.240 கோடி ரூபாய் காப்பீடு பணத்திற்காக ஸ்ரீதேவி கொலை
செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் இதில் தாவூத் இப்ராகிமுக்கு தொடர்பு
இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி
கடந்த பிப்ரவரி 24 ந்தேதி நடிகை ஸ்ரீதேவி தங்கியிருந்த ஓட்டலில் மரணமடைந்தார்.
நடிகை
ஸ்ரீதேவியின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வரும் மும்பை காவல் துறையின்
ஓய்வு பெற்ற உதவி ஆணையர் வேத் பூஷண் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்றை
வெளியிட்டுள்ளார்.<
துபாயில், ஸ்ரீதேவி
தங்கியிருந்த ஓட்டல் தாதா தாவூத்தின் இப்ராகிமுக்கு சொத்து எனக்கூறிய
அவர், சவுதி இளவரசருக்கும் தாவூத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக
தெரிவித்துள்ளார். இக்கொலையில் தாவூத்திற்கு தொடர்பு உள்ளதாக
தெரிவித்துள்ளார்.
ஸ்ரீதேவி திட்டமிட்டு கொலை
செய்யப்பட்டதாக மீண்டும் கூறிவரும் ஆணையர், தமது சந்தேகங்களின் உண்மையறிய
அதே ஓட்டலில் தமது புலனாய்வுக் குழுவுடன் தங்கியுள்ளார். ஸ்ரீதேவியின் ரத்த
மாதிரிகளையும் அவர் நுரையீரலுக்குள் எவ்வளவு தண்ணீர் இருந்தது என்ற
விபரத்தை துபாய் போலீசார் தர மறுத்துவிட்டதாகவும், அவரது பிரேத பரிசோதனை
அறிக்கை மட்டுமே கொடுத்துள்ளார்கள் எனக் கூறியுள்ளார்.
மேலும், ஸ்ரீதேவி பெயரில் 240 கோடி ரூபாய் காப்பீடு இருந்தது என்றும் இந்த காப்பீட்டின் நிபந்தனைப்படி ஸ்ரீதேவி துபாயில் இறந்தால் மட்டுமே பணம் கிடைக்கும் என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாகவும் பூஷண் தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்ரீதேவி பெயரில் 240 கோடி ரூபாய் காப்பீடு இருந்தது என்றும் இந்த காப்பீட்டின் நிபந்தனைப்படி ஸ்ரீதேவி துபாயில் இறந்தால் மட்டுமே பணம் கிடைக்கும் என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாகவும் பூஷண் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக