மின்னம்பலம்: திருநெல்வேலி,
களக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட வடுகச்சிமதில் கிராம மக்கள் தங்களின்
சொந்த செலவில் கண்காணிப்பு கேமராவை பொருத்தியுள்ளனர்.
இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் ஆவார். மேலும் கிராமத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இந்நிலையில், இசக்கியம்மன் கோயிலின் உண்டியலில் இருந்து 3 முறை பணம் திருடப்பட்டது. மேலும் வீடுகளிலும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்நிலையில், சம்பவங்களைத் தடுப்பதற்காகக் கிராம மக்கள் கூடி ஆலோசனை நடத்தினர். இதில் கிராமத்தைச் சுற்றிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்தனர். அதன்படி பொதுமக்களிடம் நிதி வசூல் செய்து, ரூ 1 லட்சம் மதிப்பீட்டில் அங்குள்ள சுடலைமாடசாமி, இசக்கி அம்மன் கோயில்கள் உள்பட 5 இடங்களில் நேற்று(மே 20) 8 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.தங்களது செலவிலேயே சிசிடிவி கேமராவை அமைத்த பொதுமக்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக