சனி, 26 மே, 2018

20 வருட திட்டம்; ஸ்டெர்லைட் பின்வாங்காது. Exiting Thoothukudi not on the cards', says Sterlite CEO P. Ramnath ...

வெப்துனியா :
     தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அந்தபகுதி மக்கள் பல வருடங்களாக போராடி வரும் நிலையில், இந்த போராட்டம் கடந்த மூன்று மாதங்களாக தீவிரம் அடைந்தது. இந்த மூன்று மாதங்களாக இருந்த மக்களின் ஆவேசம் இந்த மூன்று நாட்களில் வெளியாகி தூத்துக்குடி போர்களமாக மாறியது.இதனிடையே தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க வாய்ப்பு இல்லை என தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்ற சந்தீப் நந்தூரி உறுதியளித்தார். அதேபோன்று தமிழக அரசும் முதல் உலையை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் சிஇஓ இது குறித்து ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறிய சில பின்வருமாறு..கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் ஆலையால் எவ்வித அசம்பாவதிமும் நடக்கவில்லை. இப்போது இந்தப் போராட்டங்கள் எல்லாம் திடீரென எங்கிருந்தோ உருவாகுகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மட்டும் ஆலை நிர்வாகம் ரூ.500 கோடிக்கு மேல் முதலீடு செய்திருக்கிறது.
<20>அதனாலேயே இரண்டாவது ஆலை அமைக்க வேறு இடங்கள் கிடைத்தும் நாங்கள் தூத்துக்குடியைவிட்டு போகவில்லை. அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. இங்கிருந்து வேறு எங்கும் செல்லமாட்டோம்.

<20>;ஜூன் 6 ஆம் தேதி வழக்கு தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போது என்ன மாதிரியான விஷயங்கள் நடைபெறுகின்றன என்பதை பொறுத்து அடுத்தகட்ட முடிவை எடுப்போம் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: