திங்கள், 21 மே, 2018

சமுகநீதிக்கு தொடர் அடி ... பவுண்டேசன் கோர்ஸ் ... திமுக போர்க்கொடி!

Ganesh Babu : சமூகநீதியை ஒழிக்கும் எந்த சூழ்ச்சிக்கு எதிராகவும் முதலில்
போர் முரசுக்கொட்டுவது திராவிட முன்னேற்றக் கழகம். 2016ஜனவரியிலும் இப்படித்தான் தமிழர்கள் ஜல்லிக்கட்டு மாட்டைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருந்த வேளையில் தி.மு.க மட்டுமே நீட்டைப் பற்றிய பிரச்சாரத்தை தொடங்கியிருந்தது. இப்போது UPSC தேர்வில் மத்திய பார்ப்பன ஜனதா அரசின் தில்லுமுல்லை அம்பலப்படுத்தியிருக்கிறார் தளபதி ஸ்டாலின்!
சென்ற ஆண்டு மெல்ல மெல்ல நீட் தேர்வின் கொடூரங்கள் புரியத்தொடங்கியதும், ஆட்சியில் இருந்தப்போது 2007ஆம் ஆண்டே தமிழ்நாட்டில் 'நுழைவுத் தேர்வு ரத்து' என்கிற மாநில சட்டத்தை இயற்றி, தொடர்ந்து நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் உறுதியாக நிற்கும் தி.மு.கவைப் பார்த்து திடீரென தூங்கியெழுந்த சிலர், "நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க ஏன் குரல் எழுப்பவில்லை?" என்று கேட்ட கொடுமைகளை எல்லாம் நாம் பார்த்தோம்.

அதுப்போலவே அடுத்த ஆண்டு UPSC தேர்வில் காயடிக்கப்பட்டவுடன் நாம் தமிழர், மே 17இயக்கம் போன்ற 2mins instant noodles போல 'திடீர் புரட்சி' பேசும் விடலைகள் சட்டென துள்ளியெழுந்து, "தி.மு.க ஏன் இந்த விசயத்தில் குரல் கொடுக்கவில்லை?" என்றுப் பாட, அந்தத் தாளத்திற்கேற்ப நம் நடுநிலை நக்கீரன்களும் ஜிங்கு ஜிங்கு என்று ஆட, "அவுக பாட, இவுக ஆட..இவுக ஆட, அவுக பாட" என்று ஒரே கூத்தாக இருக்கப்போகும் அந்த வேடிக்கையான நாளை ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்.

கருத்துகள் இல்லை: