tamil.thehindu.com : அருணாச்சலப் பிரதேச எல்லையில் 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட தங்கச் சுரங்கத்தை சீனா அத்துமீறி தோண்டி வருகிறது. இந்தியப் பகுதிக்குள் பரவியுள்ள அந்தச் சுரங்கத்தைக் கபளீகரம் செய்யும் சீனாவின் முயற்சியால் அந்நாட்டுடன் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்தியா, சீனா, பூடான் நாடுகளின் எல்லையில், சிக்கிம் மாநிலத்தின் டோக்லாம் எல்லைப் பகுதி அமைந்துள்ளது. இங்கு கடந்த ஜூன் மாதம் சீன ராணுவம் சாலை அமைக்க முயன்றது. இதை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். இதனால், ஏற்பட்ட சிறிய மோதலில் இரு தரப்பு நாட்டு ராணுவத்தினரும் படைகளைக் குவித்ததால், பதற்றம் ஏற்பட்டது. அதன்பின், இந்தியா, சீன தூதரக மட்டத்தில் நடந்த சுமுகப் பேச்சுக்குப் பின், இரு நாடுகளும் தங்களின் படைகளை வாபஸ் பெற்றன. எனினும் அங்கு அவ்வப்போது, சீனா கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியத் தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சீனா - இந்தியா இடையே தங்கச் சுரங்கம் தொடர்பாக மீண்டும் மோதல் எழும் சூழல் உருவாகியுள்ளது. சீன எல்லையை ஒட்டிய திபெத்திய பகுதியில் தங்கச் சுரங்கம் அமைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச எல்லைப் பகுதியில் இந்தச் சுரங்கம் அமைந்துள்ளது.
சுரங்கத்தின் கீழ் டன் கணக்கில் தங்கம், வெள்ளி மற்றும் வேறு சில உலோகங்கள் உள்ளன. இவற்றின் பெரும்பகுதி இந்தியப் பகுதிக்குள் உள்ளது. இங்குள்ள தங்கத்தின் மதிப்பு 4 லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஒப்புதல் இல்லாமல் அங்கு தங்கச் சுரங்கத்தை வெட்டித் தோண்டும் பணியை சீனா மேற்கொண்டு வருகிறது. மேலும் சுரங்கத்தை விரிவுபடுத்தும் பணிகளையும் வேகப்படுத்தி வருகிறது. சீன அரசின் சுரங்கத்துறை நேரடியாக இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில், பிரதமர் மோடி- சீன அதிபர் இருவரும் சந்தித்தபோதே இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டது. தங்கச் சுரங்கம் தோண்டும் பணியை மேற்கொள்ள இந்தியா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அதை பெரிய அளவில் பிரச்சினையாக்க சீனா விரும்பவில்லை. ஆனால் தற்போது அங்கு தங்கம் எடுக்கும் பணியை சீனா வேகப்படுத்தியுள்ளது.
தங்கச் சுரங்கம் தோண்டும் பணியால், இந்திய - சீன உறவு சீர்கெட வாய்ப்புள்ளது, இந்தப் பிரச்சினை டோக்லாம் போல மாறுவதற்கும் வாய்ப்புள்ளது என சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.
இதை மிஸ் பண்ணாதீங்க:
கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ்: செவலியர் உட்பட 16 பேர் பலி?
‘‘காவிரி தண்ணீர் கேட்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக