விகடன் :சமானியனுக்கு ஒரு சட்டம் விஐபிக்களுக்கு ஒரு சட்டமா என
நீதிமன்றம் எஸ் வி சேகரின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தும் தமிழக அரசு மற்றும் காவல்துறை எஸ்வி சேகரை இதுவரை கைது செய்யவில்லை.
நேற்று கூட அமைச்சர் ஜெயகுமார் நீதிமன்ற உத்தரவுபடி எஸ்வி சேகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என வாயளவில் கூறிக் கொண்டிருக்கின்றார்களே நடவடிக்கை எடுத்தபாடில்லை என சமூக வலைதளங்களிலும் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. நீதிமன்றம் முன் ஜாமின் மறுத்தும் காவல்துறை எஸ்வி சேகரை ஏன் கைது செய்யவில்லை என சமூக வலைதளங்களில் கேள்வி எழும் பொது அவர் தலைமறைவாக உள்ளதாக சிலர் கூறினர்.
ஆனால் நான் தலைமறைவாகல்லாம் இல்லை சென்னைல தான் இருக்கேன் என்னை யாரும் ஒன்னும் பன்ன முடியாது என்பதை காட்டும் விதமாக எஸ்வி சேகர் நேற்று அடையாறில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணனுடன் இருக்கும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்றம் முன் ஜாமி மறுத்த ஒரு நபருடன் மத்திய அமைச்சர் கை குலுக்கி சிரிப்பது அந்த காணொளியில் பதிவாகியுள்ளது. போலிஸ் எஸ்வி சேகரை தேடுவதாக கூறப்படும் நிலையில மத்திய அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் போலிஸ் பாதுகாப்புடன் இருக்கையில் எப்படி எஸ்வி சேகர் வந்தார் போலிசிற்கு தெரியாமல் வந்தாரா ? அல்லது மேலிட உத்தரவு காரணமாக அரசு அவரை கண்டு கொள்ளவில்லையா என சமூக வலைதளத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. தலைமறைவாக உள்ளார் தலைமறைவாக உள்ளார் எனக் கூறியவர்கள் தற்போது ஏன் கைது செய்யவில்லை என்ற கேள்விக்கு பொதுமக்களுக்கு என்ன பதில் கூறப்போகின்றார்கள் என கேட்டு இந்த காணொளியை பலர் பகிர்ந்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக