தமிழ் இஸ்லாமியர்களின் பொதுச்சமூக உறவுகளை, மையநீரோட்ட அரசியலில் அவர்களுக்குரிய இடத்தை, அவர்கள் பல்லாண்டுகால் நல்லிணக்க வாழ்வின்மூலம் உருவாக்கியிருந்த வாழ்வியல் சூழலை கணிசமாக சிதைத்திருக்கிறார்
Muruganantham Ramasamy :
தமிழகத்தில்
வகாபிய தூய்மைவாதத்தை பெருங்குரலில் பேசிய இயக்கமான தமிழ்நாடு தவ்ஹீத்
ஐமாத் ன் நிறுவனர் பி.ஜே எனப்படும் பி.ஜைனுல் ஆபிதீன் அவர் வகித்த
பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.. அவரின் ரகசிய பெண் தொடர்பு
பற்றிய ஆடியோ வெளியானபோதே அவர் மீது பரிதாபமே ஏற்பட்டது..ஒருவரின்
தனிப்பட்ட உறவுகளுக்கு, அவர்களின் அந்தரங்கத்திற்கு, அதனை பராமரிக்கும்
அவர்களின் உரிமைகளுக்கு, மதிப்பளித்து விலகிநிற்கும் நவீன ஜனநாயக
மனநிலையிலிருந்து பி.ஜே வின் விவகாரம் பற்றி பேச நமக்கு ஒன்றுமேயில்லை.. ஆனால்
தனிமனிதர்களின் குறைந்தபட்ச விருப்பங்கள், தேர்வுகளுக்கு கூட மதத்தின்
கண்ணாடி கொண்டு விளக்கம் கெடுத்தவர், அதீத ஒழுக்கவியலை சமூகத்திற்கு
போதித்தவர், கலை இலக்கியம் பற்றி அற்பத்தனமான மனநிலையில் நின்று பேசியவர்,
என்பதால் மற்றவர்களை அணுகும் அளவுகோல்களை கொண்டு அவரின் வீழ்ச்சியை எளிதாக
அறுதியிட முடியாது.
அவர்
வீழ்வதற்குள்ளாக தமிழ் இஸ்லாமியர்களின் பொதுச்சமூக உறவுகளை, மையநீரோட்ட
அரசியலில் அவர்களுக்குரிய இடத்தை, அவர்கள் பல்லாண்டுகால் நல்லிணக்க
வாழ்வின்மூலம் உருவாக்கியிருந்த வாழ்வியல் சூழலை கணிசமாக
சிதைத்திருக்கிறார்.. வெளியில் பேசும் அதீத ஒழுக்கவியல் நடைமுறையில் அதீத
போலித்தனமாக உருவெடுக்கும் என்பதற்கான நம் கண்முன் சாட்சியாக அவர்
உருவாகியிருக்கிறார்.. தமிழ் இஸ்லாமியர்கள் உதறித்தள்ள வேண்டியது பி.ஜே
மட்டுமல்ல..
அவரால் முன்னெடுக்கப்பட்ட மண்ணில் கால்பாவாத வெற்று தூய்மைவாதமும் தான்..
அவரால் முன்னெடுக்கப்பட்ட மண்ணில் கால்பாவாத வெற்று தூய்மைவாதமும் தான்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக