மின்னம்பலம்: ஐந்து தென்மாநிலங்களின் வளர்ச்சியால் பல பரிமாண
வறுமை விகித தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் இடம் மேம்பட்டுள்ளது.
வருமானத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல் மக்களின் கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் உலகளவில் பல பரிமாண வறுமையின் அளவு மதிப்பிடப்படுகிறது. ஐந்து தென்மாநிலங்களின் வளர்ச்சியால் பல பரிமாண வறுமை விகித தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் இடம் மேம்பட்டுள்ளது. 2005-06ஆம் ஆண்டுக்கும் 2015-16ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இந்தியாவில் வறுமையின் விகிதம் 55 விழுக்காட்டில் இருந்து 21 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இதனால் பல பரிமாண வறுமை விகிதத்தில் இந்தியாவின் நிலை மேம்பட்டுள்ளது. 102 வளரும் நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் இந்தியா 54ஆவது இடத்தில் இருந்து (பத்து ஆண்டுகளுக்கு முன்பு) 26ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஐந்து முக்கிய தென்மாநிலங்களில் வறுமையின் சுமை குறைவாக இருந்ததால் இந்தியாவில் வறுமையின் விகிதம் ஆண்டுக்குச் சராசரியாக 3.4 புள்ளிகள் குறைந்து வந்துள்ளது.
பல பரிமாண வறுமை விகிதத்தின் தேசிய சராசரி 21 விழுக்காடாக உள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய ஐந்து தென்மாநிலங்களில் பல பரிமாண வறுமை விகிதத்தின் சராசரி 9 விழுக்காடாக உள்ளது. எனினும் அனைத்து மாநிலங்களிலுமே வறுமையின் விகிதம் குறைவடைந்துள்ளது. இந்தியாவிலேயே வறுமையான மாநிலமாக பீகார் உள்ளது. பல பரிமாண வறுமையின் விகிதம் பீகாரில் 43 விழுக்காடாகவும், ஜார்கண்டில் 36 விழுக்காடாகவும், உத்தரப் பிரதேசத்தில் 31 விழுக்காடாகவும், ராஜஸ்தானில் 31 விழுக்காடாகவும், ஒடிசாவில் 29 விழுக்காடாகவும் உள்ளது.
தென்மாநிலங்களில் பல பரிமாண வறுமையின் விகிதம் கேரளாவில் ஒரு விழுக்காடாகவும், தமிழ்நாட்டில் 6 விழுக்காடாகவும், கர்நாடகத்தில் 11 விழுக்காடாகவும், தெலங்கானாவில் 14 விழுக்காடாகவும், ஆந்திரப் பிரதேசத்தில் 13 விழுக்காடாகவும் உள்ளது. இதர மாநிலங்களான குஜராத்தில் பல பரிமாண வறுமையின் விகிதம் 16 விழுக்காடாகவும், மேற்கு வங்கத்தில் 17 விழுக்காடாகவும் உள்ளது.
‘எஸ்டிமேட்ஸ் ஆஃப் பாவர்டி இன் இந்தியா: எவிடன்ஸ் ஃப்ரம் நேஷனல் ஃபேமிலி ஹெல்த் சர்வே-4 (2015-2016)’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள ஓர் அறிக்கையில், “இந்திய மாநிலங்களின் பல பரிமாண வறுமை விகிதத்தை சர்வதேச நாடுகளின் விகிதத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், காங்கோவுக்கும் (மத்திய ஆப்பிரிக்க நாடு) யேமனுக்கும் நடுவே பீகார் உள்ளது. கம்போடியாவுக்கும் கோமரோஸுக்கும் (கிழக்கு ஆப்பிரிக்க நாடு) நடுவே ஜார்கண்ட் உள்ளது. வனுவாட்டுவுக்கும் கானாவுக்கும் (மேற்கு ஆப்பிரிக்க நாடு) நடுவே உத்தரப் பிரதேசம் உள்ளது. நேபாளத்துக்கும் ஜிபூட்டிக்கும் (கிழக்கு ஆப்பிரிக்க நாடு) நடுவே மத்தியப் பிரதேசமும், ஒடிசாவும் உள்ளன” என்று கூறப்பட்டுள்ளது. ஆக, ஆப்பிரிக்க நாடுகளுக்கு நிகரான நிலையில் வட இந்திய மாநிலங்களின் வறுமை நிலை இருப்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக