வியாழன், 17 மே, 2018

காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களுக்கு தமிழகம் பாதுகாப்பு தருவதாக கூறியது.. சிவக்குமார் பரபரப்பு

TN extended their support to give protection for Congress and JDS MLAs says, Sivakumar /tamil.oneindia.com - shyamsundar : சென்னை: காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களுக்கு தமிழகம் பாதுகாப்பு தருவதாக கூறியுள்ளது என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சிவக்குமார் பேட்டி அளித்துள்ளார்.
கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத காரணத்தால் பெரிய குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. பாஜக 104 தொகுதிகளில் வென்று இருந்தாலும் அந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த போதும், ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. பல்வேறு பரபரப்புகளுக்கும், களேபரங்களுக்கும் மத்தியில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றுள்ளார். எடியூரப்பா ஆளுநரிடம், பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாள் அவகாசம் கேட்டு இருந்தார், ஆளுநர் அவருக்கு 15 நாள் அவகாசம் கொடுத்துள்ளார். உச்ச நீதிமன்றம் பதவி ஏற்பிற்கு தடை விதிக்க மறுத்த நிலையில் தற்போது, எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

இந்த நிலையில் தற்போது ஈகிள்டன் சொகுசு விடுதியில், காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் தங்கி இருக்கிறார்கள். இன்று இரவு இவர்கள் கேரளா கிளம்ப வாய்ப்புள்ளது. அங்கு பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டு இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சிவக்குமார் பேட்டி அளித்துள்ளார். என்ன மாதிரியான திட்டங்கள் எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் பேட்டியில் கூறியுள்ளார்.
காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களுக்கு தமிழகம் பாதுகாப்பு தருவதாக கூறியுள்ளது. தமிழ்நாடு, பஞ்சாப், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா அழைத்துள்ளது. மொத்தமாக இந்த ஐந்து மாநிலமும் எப்போது வந்தாலும் பாதுகாப்பு கொடுக்கிறோம் என்றுள்ளது.
ஆனால் எங்கு செல்வது என்று இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. கட்சி முடிவு செய்யும் பட்சத்தில் இடம் மாறுவோம். ஆனால் கண்டிப்பாக வேறு மாநிலம் செல்லும் முடிவில் இருக்கிறோம் என்றுள்ளார்.

கருத்துகள் இல்லை: