வெள்ளி, 18 மே, 2018

ஆளுநருக்கு எதிராக ராம்ஜெத் மலானி வழக்கு! கர்நாடகத்தில் ஜனநாயகத்தை

மின்னம்பலம்: கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவிற்கு எதிராக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
கர்நாடகத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சார்ந்த குமாரசாமி மற்றும் பாஜகவைச் சார்ந்த எடியூரப்பா இருவரும் ஆட்சியமைக்க உரிமை கோரினர். ஆனால் நேற்று இரவு ஆளுநர் வஜுபாய் வாலா எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் "ஆளுநருக்கு எதிராக ராம்ஜெத் மலானி வழக்கு! இதனை யடுத்து  நேற்று இரவே காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினர். பாஜக மெஜாரிட்டி இல்லாத நிலையில் எடியூரப்பா பதவியேற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எடியூரப்பா பதவியேற்பதற்கு தடைவிதிக்க முடியாது என்றும் இந்த மனுவை பின்னர் விசாரிப்பதாகவும் கூறி உத்தரவிட்டனர்.<br /> <br /> அதனைத் தொடர்ந்து, பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவிற்கு எதிராக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி உச்ச நீதிமன்றத்தில் இன்று (மே 17) மனு தாக்கல் செய்துள்ளார்.


தனது மனுவில், “கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா, பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்திருப்பதன் மூலம் அரசியலமைப்புச்சட்டம் அவருக்கு வழங்கியுள்ள ஒட்டுமொத்த அதிகாரத்தையும், தவறாகப் பயன்படுத்தி இருக்கிறார். அவரின் பதவிக்கும், அவர் சார்ந்திருக்கும் அலுவலகத்துக்கும் அவமரியாதையைத் தேடிக் கொடுத்துள்ளார்” என்று ராம்ஜெத் மலானி குற்றம் சாட்டியுள்ளார்.
ராம்ஜெத் மலானி தரப்பில் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிய நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, நேற்று இரவு காங்கிரஸ் மற்றும் மஜத தாக்கல் செய்த மனு நாளை (மே 18) விசாரணைக்கு வருகிறது என்றும் எனவே அத்துடன் சேர்த்து இந்த மனுவையும் தாக்கல் வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
“எந்தக் கட்சிக்கும் ஆதரவாகவோ எதிராகவோ இந்த மனுவை தாக்கல் செய்யவில்லை. ஆளுநரின் முடிவு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளதால் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளேன்” என்று மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி விளக்கமளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: