வியாழன், 17 மே, 2018

பாஜகவின் வளர்ச்சியில் இஸ்லாமிய இயக்கங்களின் பங்கு.. உ.பி யில் உவைஸியின் கைங்கரியத்தால் பாஜக 19.தொகுதிகளில் ..

ஆலஞ்சியார் : பாஜக வளர்ச்சியில் இஸ்லாமிய இயக்கங்களின் பங்கு.. நீண்ட நாட்களாக பேசபடும் விடயம் இது எனினும் எந்த அமைப்பினரும் இது குறித்து ஆய்வு நடத்தியதாக தெரியவில்லை கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கென்று இருந்து விட்டார்களா அல்லது .. நோக்கமே அதுதானே என்று மௌனிக்கிறார்களா..
இஸ்லாமியர்களிடையே பிரிவை ஏற்படுத்தினால் அது யாருக்கு பலன் சேர்க்குமென அறிந்திராத மழலைகளா இவர்கள்.. இல்லை இவர்களுக்கு வழங்கபட்ட Assignment வேலையே அதுதானா.. ஆர்எஸ்எஸ் மிக அருமையாக யாரை எப்படி பயன்படுத்தினால் வாக்குகள் சிதறுமென அறிந்து அவர்களின் திட்டங்களை செயல்களை கடுமையாக எதிர்ப்பார்கள் அப்போதுதான் .. அந்த சமூகத்தின் இளந்தாரிகள் ஒருவித மோகத்தோடு சிந்தனை திறனின்றி அவர்களோடு கைகோர்த்து தனித்து களம்காண்பர் .. அது இயற்கையாகவே பலனை ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை கொண்ட கட்சிக்கு அல்லது அவர்களை ஆதரிக்கும் கட்சிக்கு கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டிருக்கும் நடுநிலைவாதிகளென சொல்லி திரிபவரின் கட்சிக்கு பலன் சேர்க்கும்.. 

வாக்கு அரசியலே வேண்டாமா அல்லது நாம் ஏன் தொடர்ந்து ஒரு கட்சியை ஆதரிக்கவேண்டும் அவர்களால் நமது தேவைகள் சமூகத்திற்கு பலனை பெற முடியவில்லையே.. நமது பலத்தை காட்டினால் தான் நமக்குரிய பங்கை உரிமையை பெற முடியுமென மூளைசலவை செய்கிறார்கள்.. யார் வந்தாலும் நமக்கான உரிமையை அவ்வளவுமிகவும் சீக்கிரம் பெற முடியாது ..
அதேவேளை நமக்கானதை பெற தடுத்து நிறுத்த முடியாது.. இஸ்லாமிய இயக்கங்கள் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது.. கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்து முன்னேற்ற வழிவகை செய்யவேண்டும் .. பொது சமூகத்தோடு கல்வி வேலைவாய்ப்பில் போட்டிநிலையை உருவாக்க வேண்டும் நமக்கான இடத்தில் நம் சமுதாயமக்கள் பயன்பெறாமல் காலியாக எத்தனை இடங்கள் இருக்கிறது தெரியுமா.. அதை கண்டறிந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கலாம் ..
..
தேர்தல் அரசியல்
நமக்கானதை பெற ஏன் பிறரை நம்பி செயல்படவேண்டும் நமது உழைப்பு விழலுக்கு இரைத்த நீராக போகிறதே என்போருக்கு.. ஒருவகையில் இஸ்லாமியர்களின் வாக்குகளால் தொடர்ந்து காங் திமுக போன்ற கட்சிகள் பயனடைந்தன .. அதேவேளை இன்றைக்கு இஸ்லாமிய சமூக அடைந்த உரிமைகளில் பலவற்றை அந்த கூட்டணியால் தான் சாத்தியமாயிற்று ஆனாலும் அது போதாமையை தருவதை மறுப்பதற்கில்லை.. அது மிகப்பெரிய பாதுகாப்பை தந்ததையும் மறுக்கமுடியாது
ஆனால் சமூகத்தின் வாக்குகள் .. பிரிக்கபட்டு வேறு வழிகளில் செல்வதால் அது வீணாய் போவதோடு .. இஸ்லாமியர்களை பிரதான பகையாய் கருதுகிறவர்களுக்கு பயனை தருகிறது..
..
உ.பி யில் உவைஸியின் கைங்கரியத்தால் பாஜக வெற்றியை எளிதாக்கிய இடங்கள் 19.. சில இடங்களில் சமாஜ்வாடியின் வெற்றிக்கு நெருக்கடியை தந்தது.. அதேபோல இப்போது கருநாடகாவில் sdpi செய்த புண்ணியத்தில் சில தொகுதிகளை காங்கிரஸ் இழந்தது.. சில இடங்களில் தேவகவுடா ஜனதா கட்சிக்கு இழப்பை உவைசி கட்சியும் sdpi ம் தந்திருக்கிறது
பாஜக வெற்றிபெற வசதியாக இஸ்லாமிய இயக்கங்கள் செயல்படுவது வெளிப்படையாக தெரிந்தும் அது குறித்து அவர்களுக்கு கவலையில்லை அவர்கள் நோக்கம் இஸ்லாமியர்களிடையே தங்களுக்கு ஆதரவிருப்பதை காட்டிக்கொள்ளவேண்டும் அதை வைத்து வசூல் வேட்டை நடத்தலாம் அவ்வளவுதான்.. ஆரிய கைகூலிகள் என்றழைத்தால் அது கொஞ்சம் சங்கடமாக தெரியும்.. முஸ்லிம்களை காட்டிகொடுப்பவர்கள் என்றழைக்கலாம் அது அவ்வளவு ரசகரமாக இல்லை .. ஆனால் ரோஜாப்பூ கொடுத்து பாஜக B அணி என அழைக்கலாம் .. இவர்களை ..இந்த இயக்கங்களை சொல்கிறேன்
..

இஸ்லாமியர்களின் மேம்பாடெல்லாம் இது போன்ற இயக்கங்களின் செயல்பாட்டால் சாய்ந்துபோகிறது..
ஒற்றுமையெனும் கயிறை பலமாக பிடித்துங்களென என வேதம் சொல்கிறது.. இவர்களோ .. கயிறை அறுப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள் .. ஓரணியில் இணையாதவரை.. பாசிசத்திற்கெதிரானவர்களை ஆதரித்து நிற்காதவரை இனியும் நிறைய இழப்பை தருவார்கள்.. இவர்கள் நோக்கம் பாஜக ஆட்சி அமைக்க வழியமைப்பது ..
#இஸ்லாமியசமுதாயத்திற்குமட்டுமல்ல_பொதுசமூகத்திற்கும் கேடுவிளைக்கும் கொடியவர்கள்..
..
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை: