தினகரன் :பிளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் நிறுவனம்
கையகப்படுத்தி உள்ளதற்கு வணிகர்கள் எதிர்ப்பும், ஆன்லைன் வர்த்தக
ஆலோசகர்கள் வரவேற்பும் தெரிவித்துள்ளனர். சிறு, குறு வியாபாரிகள்
பாதிக்ப்படுவார்கள் என்பதால் இந்த முடிவை கைவிட வேண்டும் என்று வணிக
சங்கங்கள் வலியுறுத்தியுள்ளனர். பிளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட்
நிறுவனம் கையகப்படுத்தி இருப்பதால் உள்நாட்டு உற்பத்தி மிகவும்
பாதிக்கப்படும் என்று வணிகர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆன்லைன் வர்த்தகத்தால் நுகர்வோருக்கு நன்மை கிடைப்பதோடு வேலை வாய்ப்பு பெருகும் என்று ஆன்லைன் வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்திய நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் கால் பதிக்க தவறியதால், அந்த இடத்தை வெளிநாட்டு நிறுவனங்கள் பிடித்துவிட்டதாகவும் அவர்கள் கூறினர். ஆன்லைன் வர்த்தகத்தில் உலகலவில் அமேசானுக்கு அடுத்த இடத்தில் உள்ள வால்மார்ட், இந்தியாவின் பிளிப்கார்ட் நிறுவனத்தை வாங்கியுள்ளது மிக முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. அதனால் இந்தியாவின் நகர்புறங்களில் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவோர் எண்ணிக்கை சிறிது குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக