தினபூமி :பெங்களூர்: கர்நாடக மாநில சட்டசபை
தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. பா.ஜ.க. - காங்கிரஸ்
இடையே நேரடி போட்டி நிலவும் சூழ்நிலையில் அங்கு ஆட்சியை பிடிக்கப் போவது
யார் என்பது நாளை தெரிந்து விடும்.
கர்நாடக
மாநில சட்டசபைக்கு மே 12-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்று தேர்தல்
ஆணையம் அறிவித்திருந்தது. அதை தொடர்ந்து காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க.
ம.ஜ.த, பகுஜன்சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சித்
தலைவர்கள் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல்
பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ்
வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர்
சோனியா காந்தி உள்ளிட்டோரும், பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர்
மோடி, பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் நிதின்கட்கரி,
ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இராணி உள்ளிட்டோரும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. கிட்டத்தட்ட 3 வாரம் அங்கு அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்றது. அதை தொடர்ந்து கடந்த 12-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவையொட்டி மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதை தொடர்ந்து பதிவான வாக்குகள் நாளை 15-ம் தேதி எண்ணப்படுகின்றன. அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட்டு கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது தெரிந்து விடும்.<

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக