மாலைமலர் :எடியூரப்பா ராஜினாமா செய்த நிலையில் ஆட்சி அமைக்க
உரிமை கோரி இன்றிரவு கவர்னரை சந்தித்த குமாரசாமி வரும் 21-ம் தேதி கர்நாடக முதல் மந்திரியாக பதவி ஏற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக கவர்னரை சந்தித்தார் குமாரசாமி - 21-ம் தேதி பதவியேற்பு விழா பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்து கொள்ள சட்டசபையில் இன்று போதுமான பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் முதல் மந்திரி எடியூரப்பா தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஏற்கனவே காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் சேர்த்து 117 உறுப்பினர்களின் ஆதரவை பெற்ற தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என உரிமை கோரி இருந்த குமாரசாமிக்கு இன்று மாலை கவர்னர் அழைப்பு விடுத்தார்.
இன்றிரவு, சுமார் 7.15 மணியளவில் ராஜ் பவனுக்கு சென்ற குமாரசாமி கவர்னர் வஜுபாய் வாலாவை சந்தித்தார். வரும் 21-ம் தேதி பிற்பகல் 12.30 மணியளவில் கர்நாடக மாநில முதல் மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்பார் என ராஜ் பவன் வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிரபல செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக