ஞாயிறு, 22 அக்டோபர், 2017

வெறும் 2 நிமிட வசனத்திற்கே மெர்சலான மத்திய அரசு?

பாஜகவின் குடுமியை பிடித்த  வசனம் இதுதான்:

ஏழு சதவீதம் ஜிஎஸ்டி வாங்கும் சிங்கப்பூர்.. அந்த நாட்டு மக்களுக்கு மருத்துவத்தை இலவசமாகத் தரப்போ... 28 சதவீத ஜிஎஸ்டி வாங்கும் நம்ம அரசாங்கத்தால ஏன் மருத்துவத்தை இலவசமாக தர முடியல..? மெடிசினுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டியாம்.... ஆனால் தாய்மார்களின் தாலியை அறுக்கும் சாராயத்துக்கு ஜிஎஸ்டியே கிடையாது.... நம்ம நாட்டோட நம்பர் 1 மருத்துவமனையில ஆக்சிஜன் சிலிண்டரே இல்லை... என்னடா காரணம்னு கேட்டா, ஆக்சிஜன் சப்ளை பன்ற நிறுவனத்துக்கு 2 வருஷமா பணம் பாக்கியாம்.... இன்னொரு கவர்மென்ட் ஆஸ்பிட்டல்ல டயாலிசிஸ் பன்றப்ப கரெண்ட் கட் ஆகி 4 பேர் செத்தே போயிட்டாங்க. ஒரு பவர் பேக்கப் கூட இல்லை.... இன்குபேட்டரில் இருந்த குழந்தை பெருச்சாளி கடிச்சு இறந்தத... நம்ம ஊர்ல மட்டும்தான்யா பாக்க முடியும்...ஜனங்க நோயைப் பார்த்து பயப்படறத விட கவர்மென்ட் ஆஸ்பிட்டல்ஸ பார்த்துதான் பயப்படறாங்க. அந்த பயம்தான் பிரைவேட் ஆஸ்பிட்டல்ஸோட இன்வெஸ்மென்ட்...

கருத்துகள் இல்லை: