ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

இந்திய பாதுகாப்பு அமைச்சராக நீட் குற்றவாளி நிர்மலா சீதாராமன் ... காட்டி கொடுத்தவர்களுக்கு வெகுமதி!

 மத்திய வர்த்தகத்துறை இணையமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் பாதுகாப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். nirmala பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மூன்றாவது முறையாக இன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் 9 பேருக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமானுக்கு மிக முக்கிய துறையான பாதுகாப்பு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இணையமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் தற்போது கேபினட் அமைச்சராக ப்ரோமோஷன் பெற்றுள்ளார். அதுமட்டுமன்றி பாதுகாப்பு அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (செப்டம்பர் 3-ம் தேதி) விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதில் நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத்துறை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கப்பல் மற்றும் போக்குவரத்து துறை இணை அமைச்சராக உள்ள பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நிதித்துறை இணை அமைச்சர் கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

முதல் முழுநேர பெண் பாதுகாப்பு அமைச்சர்: நிர்மலா சீதாராமன் இந்தியாவின் முதல் முழுநேர பெண் அமைச்சர் என்ற  அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னதாக இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது பாதுகாப்புத் துறையை கூடுதலாக சில காலம் கவனித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய இலாகாக்கள் விவரம்:

இன்று பதவி ஏற்றவர்களில் ஏற்கெனவே இணை அமைச்சர்களாக இருந்த நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 4 பேர் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கான இலாக்காக்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத்துறை, பியூஸ் கோயலுக்கு ரயில்வே, சுரேஷ் பிரபுவுக்கு வர்த்தகம், தர்மேந்திர பிரதான் ஏற்கெனவே வகித்துவந்த பெட்ரோலியத்துறையோடு திறன் மேம்பாட்டுத்துறையையும் கவனிக்கும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பொன் ராதாகிருஷ்ணனுக்கு அவர் ஏற்கெனவே வகித்து வந்த பொறுப்புகளோடு நிதித்துறை (இணை)யும் வழங்கப்பட்டுள்ளது.
ஜேட்லி, ராஜ்நாத், சுஷ்மாவுக்கு அதே பொறுப்பு:
ஏற்கெனவே நிதித்துறை அமைச்சராக இருந்த அருண் ஜேட்லி அதே பொறுப்பை தொடர்வார் என்றும் அதைப்போல ராஜ்நாத் சிங் (உள்துறை) மற்றும் சுஷ்மா சுவராஜ் (வெளியுறவு) ஏற்கெனவே அவர்கள் கவனித்து வந்த துறைகளில் நீடிப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விகடன்

கருத்துகள் இல்லை: