புதன், 6 செப்டம்பர், 2017

டாக்டர் அனிதா ... எஸ்.எஸ்.சிவசங்கர் ... எச் ராஜா , கிருஷ்ணசாமிகளின் சி பி ஐ சந்தேகங்கள் .

மானங்கெட்ட எச்.ராஜா கிருஷ்ணசாமிக்கு தெரியுமா?
சிவசங்கர் மாணவர் நேசன் என்று....
தென்தமிழகத்திலிருந்து வடதமிழகம் வரை அனிதாவிற்கு அஞ்சலி செலுத்தி வர உணர்வலைகளால் தத்தளிக்கிறது தமிழர்க்கூட்டம்..
ஆனால் பாஜகவின் எச்.ராஜாவும் பாஜகவை நக்கி பிழைக்கும் கிருஷ்ணசாமியும் அனிதாவின் தற்கொலையில் சந்தேகம் இருக்கிறது என்று கூறுகிறார்கள்..
இவர்களுக்கு சந்தேகம் வருவது இயற்கை தான்..
ஏனென்றால் இவர்களின் பிறப்பும் அப்படித்தான்..

இந்த இழிபிறப்புகளின் சந்தேகத்தை திமுகவின் அடிமட்ட உடன்பிறப்பாகவும் அரியலூர் மாவட்ட திமுகவின் அடிமட்டத் தொண்டனாகவும் அண்ணன் எஸ் எஸ் சிவசங்கர் அவர்களின் தம்பியாகவும் அனிதாவின் அண்ணனாகவும் விளக்கி தீர்த்து வைக்க கடமைப்பட்டுள்ளேன்...
1.அனிதா என்ற பள்ளிக்கூட மாணவி சிவசங்கரை சந்தித்தது ஏன்?
2.அனிதா உயர்நீதி மன்றம் வரை சென்று நீட்டை எதிர்த்து போராடுவதற்கு யார் பின்புலம்?

3.அனிதா இறப்பை சிவசங்கர் ஏன் இவ்வளவு உணர்வுப்பூர்வமாக பேசி வருகிறார்..
இதுதான் எச்.ராஜா.. கிருஷ்ணசாமியின் சந்தேகங்கள்...
அனிதா அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர்..இவர் அரியலூர் நகராட்சியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தவர்...எஸ் எஸ் சிவசங்கர் அரியலூர் திமுக மாவட்ட செயலாளர்..முன்னாள் எம்எல்ஏ..அரியலூரில் வசித்து வருபவர்..
சரி, அனிதா ஏன் நீட் சம்பந்தமாக சிவசங்கரை சந்தித்தார்..சிவசங்கர் அனிதா வசிக்கும் குன்னம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்..சட்டமன்ற உறுப்பினர் என்பதற்காகவா மட்டும் சந்தித்தார்..இல்லை...
சிவசங்கர் தன்னுடைய குன்னம் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த போது செம்பருத்தி என்ற பள்ளிக்கூட மாணவி தனது ஊருக்கு நூலகம் வேண்டும் என்று கோரிக்க வைத்தார்..சிவசங்கரும் நூலகத்தை கட்டி முடித்து செம்பருத்தி கையாலேயே நூலகத்தையும் திறந்து வைக்க செய்திட்டார்..
இந்த செய்தி தமிழக ஊடகங்கள் மட்டுமில்லாமல் இந்திய ஊடகங்கள் வரை பேசப்பட்டது..அரியலூரில் குறிப்பாக குன்னம் தொகுதி மக்களிடையே கட்சி பேதமின்றி பாராட்டுதலை பெற்றார்..
அந்த வகையில் அதிக மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வால் மருத்துவக்கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்படுவதை உணர்ந்த அனிதாவும் அவரது அண்ணனும் சிவசங்கரிடம் உதவி கேட்டு சென்றுள்ளனர்..
சிவசங்கரும் அனிதாவின் மதிப்பெண்களை பார்த்து விட்டு இவ்வளவு அதிகமான மதிப்பெண்களை பெற்றும் மருத்துவம் படிக்க முடியாத சூழலா என்ற கேள்வியுடன் மீடியாக்களிடம் அனிதாவை அறிமுகம் செய்து வைத்தார்..நீட்டை எதிர்த்தார்..நியாயத்தை கேட்டார்..தன்னை தேடி வந்து உதவி கேட்ட தன் மண்ணின் மாணவிக்கு உதவி செய்தது தவறா?
எச்.ராஜா கிருஷ்ணசாமி உங்கள மாதிரி வெறும் பேட்டியில் அரசியல் செய்பவரல்ல சிவசங்கர்..வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி போராடும் வீரன்...
மாணவர்களுக்கு சிவசங்கர் உதவுவது இப்போதல்ல..அவர் முதன்முறையாக 2006ல் ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதே அவரது அலுவலகத்தை ஆண்டிமடம் பகுதியை சேர்ந்த மாணவர்கள் கணினி பயிற்சி பெறுவதற்காக இலவச வகுப்புகளை நடத்தி வந்தார்...
அதுமட்டுமல்ல சிவசங்கர் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த பத்தாண்டு காலமாக தனக்கு சென்னையில் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் ஒதுக்கப்பட்ட குடியிருப்பை மாணவர்கள் படிப்பதற்கும்..படித்த மாணவர்கள் வேலை வாய்ப்பு தேடுவதற்கும் தங்கி பயன்படுத்தி கொள்ள உதவினார்...
இதுவரை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் 7 பி.எல் மாணவர்கள், சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ பொலிட்டிக்கல் சயின்ஸ் 1 மாணவர், அதே பல்கலைக்கழகத்தில் 1 எம்.காம் மாணவர்,1 எம்பில் மாணவர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ தமிழ் 1 மாணவர்,அதே கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் 1 மாணவர்,
மேலும் சென்னை தொலைதூர கல்வி பயின்ற எம்பிஏ 1 மாணவர் என்று
கடந்த பத்தாண்டுகளில் சிவசங்கர் அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் விடுதி குடியிருப்பு அறையில் தங்கி படித்து பயன்பட்டிருக்கிறார்கள்...
மேலும் அரியலூர் பெரம்பலூர் திருச்சி மதுரை தென்மாவட்டங்களை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட பொறியியல் டிகிரி படித்த மாணவர்கள் வேலை தேடுவதற்கும் நேர்காணல்களுகாகவும் சில மாதங்கள் தங்கி வேலைக்கு செல்லவும் எஸ் எஸ் சிவசங்கர் அறையை பயன்படுத்தியுள்ளனர்...
தென்மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் குரூப் 1 தேர்வு பயிற்சிக்காக சிவசங்கரின் அறையில் தங்கி இருந்து சென்னை தேவநேயப் பாவாணர் நூலகத்தில் பயின்று தேர்வில் வெற்றி பெற்று தற்போது கோயம்புத்தூரில் ஏ.இயாக பணியாற்றி வருகிறார்...தற்போது கூட சிவசங்கர் அரியலூர் தொகுதியில் போட்டியிட்டு தோற்ற போதும் தனது அறையில் தங்கி இருந்த மாணவர்கள் தொடர்ந்து படிப்பதற்கு உதவி செய்து வருகிறார்..
இப்படி எஸ் எஸ் சிவசங்கர் மாணவர்களை விரும்பும் மனிதராக இருப்பதினால் தான் சிவசங்கரை மாணவர்கள் தேடி வருகின்றனர்..அப்படி தன்னை தேடி வரும் மாணவர்களை அவரது அரசியலுக்கு பயன்படுத்தி கொள்வதில்லை...
இதையெல்லாம் எச்சி ராஜாவுக்கும் கேடுகெட்ட கிருஷ்ணசாமிக்கும் தெரியாது...
சிவசங்கர் நேர்மறையான எண்ணங்களை கொண்டவர்.
தன்னை தேடி வரும் இலட்சியவாதிகளை ஊக்கப்படுத்தி வருபவர்.
அனிதாவின் தற்கொலையை நிச்சயம் சிவசங்கரால் தாங்கிக் கொள்ள முடியாது..
ஆனால் கிருஷ்ணசாமி போன்றவர்கள் அந்த மாணவியின் தற்கொலையை ஊதாசினப்படுத்தியும்
தரக்குறைவாக பேசி வருவதையும் கண்டு மக்கள் கொதிப்படைந்துள்ளனர்...
விவசாயிகளுக்கு மாணவர்களுக்கு எதிராக பாஜக அரசு நடந்து கொள்வதை தமிழகத்தில் இருக்கும் சாமான்ய மனிதன் வரைக்கும் தெரியும்..
அனிதாவின் தற்கொலையில் சிவசங்கரிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சொல்லும் கிருஷ்ணசாமி எச் ராஜா இதை அனிதா வீட்டிற்கு முன்பு வந்து சொல்லுங்கள் அனிதாவின் அப்பாவும் அண்ணன்களும் உங்களை செருப்பால் அடித்து விரட்டி விடுவார்கள்..
சிவசங்கர் மீது மிகுதியான கோபத்தில் பாஜக இருப்பதற்கான காரணம் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிவசங்கர் தனது சமூக வலைத்தளத்தில் பாஜகவின் பண மதிப்பிழப்பு விவகாரம்..இந்தி திணிப்பு.. உத்திரபிரதேசத்தில் முலாயம் அகிலேஷை பிரித்த பிஜேபி சூழ்ச்சி..மாட்டுக்கறி அரசியல்..பீகாரில் நிதிஷ்-லாலு பிரிவு..கோவா மணிப்பூரில் பிஜேபியின் குறுக்கு வழி அரசியல்..குஜராத்தில் ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டுக்காக அமித்ஷா போட்ட ஆட்டம்...தமிழ்நாட்டில் பிஜேபியின் பினாமி ஆட்சி..இவற்றை பற்றியெல்லாம் சிவசங்கர் தனது முகநூலில் எளிமையாக அனைவருக்கும் புரியும்படி பிஜேபியின் வயிறு எரியும்படி மோடியின் முகத்திரையை கிழி கிழியென கிழித்து பதிவிட்டுள்ளார்..
அந்த பதிவுகளை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முகநூலில் ஷேர் செய்துள்ளனர்..
மேலும் அண்ணன் சிவசங்கரின் பதிவுகளை நக்கீரன், ஆனந்த விகடன்,டெய்லி ஹண்ட் மின்னம்பலம் போன்ற இணைய இதழ்கள் தங்களது பக்கங்களில் செய்திகளாக தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.. அனிதாவின் மரணம் வெறும் குழுமூர்க்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டிய செய்தி மிஞ்சி போனால் மாவட்ட செய்திகளில் பெட்டி செய்தியாக வந்திருக்கும் இல்லை வராமலும் போயிருக்கும்..
ஆனால் சிவசங்கர் அனிதாவை மீடியாக்களிடம் அறிமுகப்படுத்தி வைத்ததால்....
இன்று....
தமிழகமே கொந்தளிக்கும் தலைப்பு செய்தியாக மாறி இருக்கிறது..
பிஜேபியின் கோரமுகம் வெளியே தெரிய சிவசங்கர் காரணமாகி இருக்கிறார்..
இவையெல்லாம் தான் எச்.ராஜா கிருஷ்ணசாமியின் சிவசங்கர் மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சொல்லும் காரணங்கள்..
நீட் தேர்வுக்கு ஆதரவாக கையெழுத்து போட்ட பன்னீர்செல்வம் பிஜேபியின் கையாள்..மாபா பாண்டியராஜன் நீட் தேர்வு கோச்சிங் சென்டர் வைத்து கோடிக்கணக்கில் சுருட்டுகிறான்..பிஜேபி இவர்களை வைத்து குறுக்கு வழியில் தமிழகத்தை ஆளவில்லை..ஆட்டுவிக்கிறது...
நெஞ்சுக்கு குறுக்கே பூணூல் போட்டு குறுக்கு வழியிலே யோசிக்கும் கூட்டமே..உங்கள் நெஞ்சில் ஆயிரக்கணக்கான வருசங்களாய் ஊறிக்கிடக்கும் மனுநீதி நஞ்சு கிடக்கிறது..
நீட் தேர்வுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போது தர்மம் வென்றது என்று சொன்ன எச்.ராஜாவே..எதுடா தர்மம்?
ஏழை சூத்திர சேரிப்பெண் தனது மாநில மருத்துவ கல்லூரியில் படிக்க தனது மாநில பாடத்திட்டத்தில் படித்து அதிக மதிப்பெண்கள் வாங்கிய போதும் நீட் தேர்வு என்ற கதவால் அந்த பிஞ்சின் கனவை அடைத்ததடா தர்மம்..அது அதர்மம்டா..அசிங்கம்டா..
.

கருத்துகள் இல்லை: