savukkunews
நீதிமன்றம்
ஒரு உத்தரவு பிறப்பித்தால் அந்த உத்தரவின் அசல் நகலை தரும் வரை அரசு
இயந்திரம் ஒரு துளியும் நகராது. உதாரணத்துக்கு உங்களை பணி நீக்கம் செய்து
விட்டார்கள். நீதிமன்றம் அதை ரத்து செய்து விட்டது என்று வைத்துக்
கொள்வோம். தீர்ப்பின் ஜெராக்ஸ் காப்பியை எடுத்து நீங்கள் அந்த
அலுவலகத்துக்கு சென்றால், கொஞ்சமும் தயங்காமல், அசல் உத்தரவு இல்லையென்றால்
எதுவும் செய்ய முடியாது என்று சொல்வார்கள். இதுதான் அரசு இயந்திரத்தின்
நடைமுறை. இன்று போராட்டங்களுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்த செய்தி ஊடகங்களில் மட்டுமே வந்தது. முழுமையான உத்தரவு மாலையில்தான் வந்தது. அந்தத் தீர்ப்பில் மிகத் தெளிவாக "மக்களுக்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உண்டு. ஆனால் சட்டம் ஒழுங்கை பாதிக்காத வகையில் அந்த போராட்டம் நடக்க வேண்டும்" இதுதான் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டது.
ஆனால் இப்படிப்பட்ட விஷயம் அந்த உத்தரவில் இருக்கிறது என்பது
டிகே.ராஜேந்திரனுக்கு நிச்சயம் தெரியாது. எந்த உச்சநீதிமன்ற
நீதிபதியும், தாங்கள் வழங்கிய தீர்ப்பு என்ன என்று குட்கா வியாபாரியுடம்
தொலைபேசியில் சொல்லியிருக்கவும் வாய்ப்பு இல்லை.
அப்படி இருக்கையில், டிகே ராஜேந்திரனுக்கு மட்டும் எப்படி பொதுக் கூட்டத்தை தடை செய்ய தோன்றியது ? ஆங்கிலத்தில் More loyal than the king himslef அதாவது அரசனை விட அதிகமாக அவருக்கு விசுவாசமாக இருப்பது. இப்படி விசுவாசமாக இருப்பதற்கு காரணம் என்னவென்றால், ஓய்வு பெறும் கடைசி நாளில், கடைசி நேரத்தில் மீண்டும் தன்னை டிஜிபியாக நியமித்த புளிமூட்டைக்கு காட்டும் விசுவாசமே.
ஐபிஎஸ் தேர்ச்சி பெற்ற ஒரு அதிகாரிக்கு அரசியல் சாசனத்தில் பிரிவு 19ல் போராடுவதற்கான முழுமையான உரிமை வழங்கப்பட்டுள்ளது என்பதும், உச்சநீதிமன்றம் யாருமே வாயைத் திறக்கக் கூடாது என்று உத்தரவு போடுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத ஒரு மர மண்டையாக இருக்கிறார் டிகே.ராஜேந்திரன்.
ராஜேந்திரன் பதவியேற்ற அன்றே நினைத்தேன். இவர் மிகப்பெரும் தவறை செய்கிறார் என்று. அது இவரின் நடவடிக்கைகளால் இன்று உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது.
வரக் கூடிய ஆளுங்கட்சிக்கு நான் வைக்கும் ஒரே கோரிக்கை இதுதான். ஒரு நாளாவது ராஜேந்திரனை சிறையில் வையுங்கள். ஒரே ஒரு நாள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக